மாடு எப்போ உச்சா , சாணி போகும்னு காத்திருக்கேன் ! நடிகர் ஹரிஷ் கல்யாண் !

0
1355
harish-kalyaan

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஹரீஷ் கல்யாண். தற்போது வரை 8 படங்கள் நடித்திருக்கிறார் ஹரீஷ். ஆனாலும் இவருக்கு மக்களிடையே பிரபலத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

Harish-Kalyan-Bigg-Boss

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்து பைனல் வரை நின்று சமாளித்தவர் ஹரீஷ். பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருகிறார். தற்போது, ‘பியார் பிரேமா காதல்’, ‘கன்னிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பியார் பிரேமா காதல் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பது அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரைசாதான். இந்நிலையில் பிரபல வார இதழுக்கு இவர் கொடுத்த பேட்டியில் பொங்கலை எப்படி எல்லாம் கொண்டாடினார் என பதில் அளித்துள்ளார்,.

harish

சின்ன வயதில் பொங்கல் என்றால் எனக்கு ஜாலியாகிவிடும். ஏனென்றால் அதற்கு தான் மூன்று நாட்கள் லீவ் கிடைக்கும். பொங்கல் அன்று மாடு கோமியம் ஊற்றினாலோ அல்லது, சாணி போட்டாலோ நம்மை ஆசிர்வதிப்பது போன்றதாகும் என யாரோ என்னிடம் கூறினார்கள். இதனால் நானும் ஆசீர்வாதம் பெற மாட்டின் பக்கத்தில் போய் நின்று எப்போ உச்சா போகும் என காத்துகொண்டு இருந்தேன். அதேபோல் போகி பண்டிகை அன்று ஏதாவது பழையதை எரித்தால் எனக்கு பிடிக்காது. அதனை இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம்.

என தனது பொங்கல் அனுபவங்களை கூறினார் ஹரிஷ் கல்யாண்.