இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு ஜிஎஸ்டி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பி இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற சேனலில் வாசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி இருந்தார். இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதோடு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுமான் இசைப்பயணம்:
மேலும், இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ரகுமான். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.
பொன்னியின் செல்வன் படம்:
அந்த வகையில் தற்போது இவர் இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்து இருக்கிறார். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
ரகுமானுக்கு வந்த நோட்டீஸ்:
அதோடு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஜிஎஸ்டி கமிஷனர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜி எஸ் டி கமிஷனர் ஏ ஆர் ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ஜி எஸ் டி கமிஷனர் கொடுத்த விளக்கம்:
இதை எதிர்த்து ரகுமான் அவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பின் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் ஜிஎஸ்டி கமிஷனர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்கள். அதில் அவர்கள் கூறியிருந்தது, ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இதனால் தான் ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். ரகுமானை கலங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.