16 பெண்களுக்கு பாலியல் தொல்லை.! பிரபல நடிகர் மீது நடிகைகள் போலீசில் புகார்.! போட்டோ இதோ

0
429

சமீப காலமாக திரை துறையில் இருக்கும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார்கள் என்று பல நடிகைகள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இதற்கு ஹாலிவுட் சினிமா துறையும் விதிவிளக்கல்ல. தற்போது ஹாலிவுடை சேர்ந்த பிரபல நடிகர் மோர்கன் ப்ரீமேன் என்பவர் பாலியல் தொல்லை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

morgan-freeman

ஹாலிவுட் நடிகர் மோர்கன் ப்ரீமேன் எண்ணற்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 80 வயதாகும் இவர் “லூசி ,புரூஸ் தி அல்மையிட்டி ” ஹாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 35 ஆண்டுகளுக்கு மேல் ஹாலிவுட் சினிமா துறையில் நடித்து வருவதால் இவருக்கு கடந்த 2017 ஆம் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைத்தது.

இந்த அளவிற்கு பிரபலமான நடிகர் தன்னுடன் நடித்த 16 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா தொலைக்காட்சி சேனல் ஒன்று மோர்கன் ப்ரீமேனுடன் நடித்த 16 நடிகைகளிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

morgan

அந்த ஆய்வில் மோர்கன் ப்ரீமேனுடன் நடித்த 8 நடிகைகள் மற்றும் 8 துணை நடிகைகளும் அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பகீர் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவல் உண்மை தான் என்றும் இதற்க்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் நடிகர் மோர்கன் ப்ரீமேன் தெரிவித்துள்ளார்.