விஜய் கூட செய்யாத உதவி – கேப்டன் மகனுக்காக லாரன்ஸ் செய்த பேருதவி.

0
530
- Advertisement -

விஜயகாந்த் மகனுக்காக ராகவா லாரன்ஸ் செய்ய துணிந்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் விஜயகாந்தின் இறப்பு செய்தி புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் தன்னுடைய தாயுடன் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று இருந்தார்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் வீடியோ:

அங்கு அவர், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். அப்போது பிரேமலதா, சண்முக பாண்டியனை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ராகவா லாரன்ஸிடம் சொல்லியிருக்கிறார். இதனை அடுத்து சண்முகபாண்டியனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், கேப்டன் விஜயகாந்த் தமிழ் திரையில் எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் செய்யும் உதவி:

அதுமட்டுமில்லாமல் இளம் நடிகர்களுக்கு உதவும் விதமாக கேமியோ ரோலிலும் அவர் நடித்துக் கொடுத்து உதவுகிறார். அதனால் அவருடைய மகனுக்கு என்னால் முடிந்த உதவியாக அவர் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்யப் போகிறேன். ஒருவேளை அவர் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கோ, பைட்டுக்கோ கேமிரா ரோலில் நடிக்க அழைத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.

-விளம்பரம்-

விஜயை திட்ட காரணம்:

யாராவது இயக்குனர்கள் டபுள் ஹீரோ கதை ஏதேனும் வைத்திருந்தால் என்னை அணுகுங்கள். நான் சண்முக பாண்டியன் உடன் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ராகவா லாரன்ஸ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் விஜய்யை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். காரணம், விஜய் திரையுலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான்.

சண்முக பாண்டியன் நடிக்கும் படம்:

ஆரம்பகாலத்தில் விஜய் உடைய படங்கள் தோல்வியடைந்தது. அதற்குப்பின் விஜய் நடித்த ஒரு படத்தில் விஜயகாந்த் கேமியோ ரோல் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் அவருக்கு மார்க்கெட் எகிறியது. தற்போது அவருடைய மகனுக்கு விஜய் எந்த ஒரு உதவியுமே செய்யவில்லை. இதனால் நெட்டிசன்கள் விஜய்யை திட்டி விமர்சித்து வருகிறார்கள். தற்போது சண்முகபாண்டியன் அவர்கள் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கும்கி படம் போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பின் இவர் சசிகுமார் இயக்கி வரும் குற்றப்பரம்பரை என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

Advertisement