விஜயகாந்தின் இறப்பிலிருந்து வடிவேலு குறித்த விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவுடன் படங்களில் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர் விஜயகாந்த், போண்டாமணி இறப்பிற்கு வடிவேலு ஏன் வரவில்லை? வடிவேல் உடன் நடித்த பல நடிகர்கள் அவரை விமர்சனம் செய்திருக்கிறார்கள்? இதற்கு உங்களுடைய கருத்து என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பெஞ்சமின், போண்டாமணி அண்ணன், நான், என்னைப் போன்ற சில நடிகர்கள் எல்லோருமே வெளியே வந்ததற்கு காரணமே வடிவேலு தான்.
வடிவேலு பிறவி கலைஞர் என்றாலும் அவர் நல்ல மனிதரை மனிதர் கிடையாது. போண்டாமணி அண்ணனுடைய ஆதங்கமும் அதேதான். சாகுவதற்குள் வடிவேலு சாரை ஒரு தடவை பார்க்கணும் என்று என்னிடம் சொன்னாரு. ஆனால், அவர பாக்க முடியாமல் அவருடைய ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. போண்டாமணி யாரிடமும் எங்களுக்கு உதவி பண்ணுங்கள் என்று நிக்க மாட்டார். யாரிடமும் போய் காசு கேட்கவும் மாட்டார். அவர் தான் கொடுத்து விட்டுப் போவார். அப்படி கொடுத்து கொடுத்து பழகன மனுஷன்.
பெஞ்சமின் பேட்டி:
அவர் சிவகங்கையில் கோடீஸ்வரனாக வாழ்ந்தவர். இங்கு சினிமா மீது இருந்த ஆசையால் சாப்பாடு காசு இல்லாமல் போண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். நாங்களும் போண்டா தான் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். அப்படி இருந்தும் படப்பிடிப்பு தலத்தில் எங்களை எல்லாம் அடிப்பார்கள். நாங்கள் வடிவேல் சார் கூட நடிக்க வந்தோம் என்றால் ஒரு ஆள்தான் நடிக்க போறீங்க 6 பேர் வந்து இருக்கீங்க என்று கேட்பார்கள். அவர் ஸ்பாட்டுக்கு வந்த பின்பு தான் யாருடன் நடிக்க வேண்டும் என்று சொல்வார். அப்போ ஒரு ஆளுக்கு தான் சோறு கொடுப்பார்கள்.
வடிவேலு குறித்து சொன்னது:
அதனால் இத்தனை பேருக்கும் சோர் கொடுக்க முடியுமா? தட்டு புடுங்கி போயிடுவாங்க. பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே தட்டை வாங்கிடுவாங்க. இதற்கு ஒரு நாளும் வடிவேலு சார் குரல் கொடுத்தது இல்லை. அவருடன் நடிப்பவர்கள் சாப்பிட்டார்களா? என்ன செய்கிறார்கள்? என்றெல்லாம் பார்க்க கூட மாட்டார். அவர் மட்டும் கேரவனில் போய் உட்கார்ந்து கொள்வார். நாங்கள் மரத்தடியிலோ, ரோட்டிலையோ உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்போம். காரணம் நாங்கள் விஐபி இல்லையே? வடிவேலுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும்.
சக நடிகர்கள் நிலைமை:
எங்களுக்கெல்லாம் அப்படி கிடையாது. நாங்க வெளியே தெரியணும், நம்ம காமெடி நாலு பேரு மத்தியில் பேசப்படும் என்பதால் தான் நடித்தோம். காசு பணத்தை வைத்துக் கொண்டு நடிக்க சான்ஸ் கேட்டு வரவில்லை. நான்கு நாள் தொடர்ந்து சூட்டிங் போனால் எங்கள் வீட்டில் கறி குழம்பு சாப்பாடு, சூட்டிங் இல்லை என்றால் நாங்கள் பசி பட்னி தான். இதுதான் எங்களுடைய வாழ்க்கை. அதேபோல் விஜயகாந்த் சார் அரசியலில் இருந்தபோது அவர் யாரையும் அரசியலில் பிரச்சாரத்திற்கு கூப்பிடவே மாட்டார். அவருடன் இருக்கும் நடிகர்கள் என்று பார்த்தால் அது தானா சேர்ந்த கூட்டம்.
விஜயகாந்த் குறித்து சொன்னது:
அவர் யாரையும் திட்டி கேவலப்படுத்தவும் மாட்டார். அவர் நடிகர் சங்கம் மூலமாக செய்தது கம்மிதான். அவர் சொந்த பணத்தை அப்படியே அள்ளி அள்ளி கொடுப்பார். அவர் தேடி போறவர்களுக்கு சாப்பாடு போட்டு, என்ன வேணும் என்று அவர்களுடைய குறை தீர்ப்பார். எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மூலமாக 20- 30 ஆயிரம் வரை வாங்கி கொடுப்பார். அப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.