சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் ஒருவர்.விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக காதல் செய்தது 2017 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி இத்தாலியில் தங்களது திருமணத்தை செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் மட்டும் என வெகுசிலரே பங்கேற்றனர். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நல்ல செய்தி சொல்லாமல் இருந்து வந்தனர் விருஷ்கா தம்பதியினர். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கிறார் என்று கடந்த சில நாட்களாக கிசுகிசுக்கப்பட்டது.
வழக்கம் போல இந்த செய்தியும் வதந்தி என்று நினைத்து வந்த நிலையில் தான் கர்பமாக இருப்பதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அறிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் நாங்கள் மூன்று பேராக மாறப்போகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். அனுஷ்கா ஷர்மா, தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அறிவித்த போது ஒரு கருப்பு நிறத்தில் வெள்ளை நிற புள்ளிகளை போட்ட ஒரு கவுனை அணிந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த புகைப்படத்தில் அனுஷ்கா உடுத்தியிருக்கும் உடை குறித்து சில சுவாரசிய விடயங்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் பயன்படுத்தி வரும் இந்த கருப்பு நிற உடையில் வயிறு பகுதியில் எலாஸ்டிக் வைத்து கச்சிதமாக அவருக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடை குழந்தை வளர்சிக்கு உதவும் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆடை கனடா டாலர் மதிப்பில் 972 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 54,648. ஆனால், விற்பனையில் 486 டாலருக்கு கிடைக்கிறது அதாவது 27,234 ரூபாய்க்கு இந்த உடை கிடைக்கிறது.