எமி ஜாக்சன் முதல் அமலா பால் வரை – திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான தமிழ் நடிகைகள். இதனை பேரா?

0
281
- Advertisement -

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர கலாச்சாரமும், நாகரிகமும் வேகமாக செல்கிறது. அதிலும், சினிமாவில் பிரபல நடிகர்களின் வாழ்க்கையிலும் கலாச்சாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து அதுவும் ஹாலிவுட் நட்சத்திரங்களில் இருந்து நிறைய பழக்கங்களை நம்முடைய இந்திய சினிமா பிரபலங்கள் மத்தியில் பரவி கிடக்கிறது.

-விளம்பரம்-

அதில் ஒன்று தான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி இருப்பது. இந்நிலையில் இந்திய சினிமா உலகில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஸ்ரீதேவி:

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி முடி சூடா ராணியாக திகழ்ந்து இருந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை ஸ்ரீதேவி. தனது கடைசி காலம் வரை இளமை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொள்ளும்போது இவர் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை ஸ்ரீதேவியும் வெளிப்படையாகவே பேசி இருந்தாராம்.

எமி ஜாக்சன்:

ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். இவர் ஹாலிவுட் மாடலும் ஆவார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் எமி கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி, ரஜினியின் 2.0 உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்து இருந்தார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து கர்ப்பமாகிவிட்டார். பின் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு இருவருமே பிரிந்து விட்டார்கள். தற்போது இவர் வேறொரு நடிகரை திருமண செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

நேஹா தூபியா:

இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நேஹா தூபியா. இவர் இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் மாடல் அழகியும் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு அங்கத் பேடி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருப்பதை பல காலமாக மறைத்தே வைத்திருந்தாராம்.

கல்கி கோச்லின்:

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் கல்கி கோச்சலின். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்தார். இது குறித்து பலரும் விமர்சனங்கள் செய்திருந்தார்கள். இவர் கை ஹெர்ஷ்பெர்க் என்பவரை காதலித்து இருந்தார். அதற்கு பின் தான் இவர் அனுராக் காஷ்யப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆலியா பட்:

ஹிந்தி திரையுலகில் சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தவர்கள் நடிகர் ரன்பீர் கபூர்- நடிகை ஆலியா பட். இவர்கள் இருவருமே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

சரிகா:

ஒரு காலத்தில் இந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சரிகா. இவர் உலக நாயகன் கமலஹாசனின் மனைவி. ஏற்கனவே கமலஹாசன் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தெரிந்தும் கமலஹாசன்- சரிகா இருவருமே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள். இந்த உண்மை தெரிந்த பின்பு வாணி கணபதி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதோடு சரிகா கர்ப்பமாக இருந்தார். இதனால் தான் கமலஹாசன் சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இலியானா:

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்குப்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வந்தார். சில ஆண்டுகளாக இவர் பாலிவுட்டில் தான் பிஸியாக நடித்து வருகிறார். பின் கடந்த 2022 ஆம் கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் இலியானா அறிவித்திருந்தார். இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பமான பின்னர்தான் இவர் தன்னுடைய திருமணத்தை உறுதி செய்து இருந்தார்.

அமலாபால்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒரு அமலாபால். இவர் ஏற்கனவே இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் கருத்து வேறு காரணமாக பிரிந்து விட்டார்கள். பிரிவிற்கு பிறகு அமலாபால் தன்னுடைய கேரியரில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் நீண்ட நாள் நண்பர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து அமலா பால் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்தின்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தார்.

Advertisement