இந்து மதம் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் ரோகினி மீது புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரோகினி. இவர் ஆரம்பத்தில் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இதனிடையே இவர் தமிழ் சினிமாவின் வில்லன் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது.
ரோகிணி குடும்பம்:
ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். பிரிவிற்கு பின் ரோகிணி தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் வெளியாகி இருந்த தண்டட்டி படத்தில் ரோகிணி நடித்து இருந்தார். இந்த படம் கிராமத்தின் மண்வளம் மாறாமல் புதிய கதைகளத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தண்டட்டி படம்:
இந்த படத்தில் பசுபதி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா ஷங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த நிலையில் நடிகை ரோகினி மீது போலீசில் புகார் எழுதியிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமகிருஷ்ணன் என்பவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 47 வயதாகிறது. இவர் பாரத் இந்து முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
ரோகிணி மீது புகார்:
இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ரோகினி மீது புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், தி.க.தலைவர் வீரமணி, நடிகை ரோகிணி, சிகரம் செந்தில்நாதன், பூபாலன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக அவதூறாக பேசி வருகிறார்கள். இவர்கள் சனாதனம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் செய்யாமல் மக்கள் மத்தியில் தவறாக கோட்பாடுகளை உருவாக்கி பொய்பிரசாரம் செய்கின்றார்கள்.
புகார் குறித்த காரணம்:
இந்து மதத்திற்கு எதிராக குற்றசாட்டுகளை சுமத்தி வருகின்றார்கள். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்த போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த மாநாடுக்கு அளித்த அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். தற்போது தகவல் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது