“ஹிப் ஹாப் தமிழா” ஆதி பற்றி யாராவது தெரியாமல் இருப்பார்கள்!! ஹிப் ஹாப் தமிழா என்று சொன்னாலே போதும் இளைஞர்கள் அனைவரும் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்கத் தொடங்கினார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹிப் ஹாப் ஆதி பாடி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்து உள்ளார். அது “மீசையை முறுக்கு, நட்பே துணை” உள்ளிட்ட படங்களில் நடிகர் ஆதி நடித்து உள்ளார். தற்போது நடிகர் ஆதி அவர்கள் “நான் சிரித்தால்” என்ற படத்தின் நடித்து உள்ளார். சமீபத்தில் இவர் பிரபல சமூக வலைத்தள சேனல் ஒன்றுக்கு நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இதையும் பாருங்க : வாணி போஜனை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயின் ஆனார் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.
அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த டீவ்ட்டை பார்த்த ஆர்.ஜே. பார்வதி அவர்கள் ‘இதெல்லாம் நகைச்சுவைக்காக பண்ண விஷயம். இதை பெருசாக எடுத்துக்க வேண்டாம் எனவும் ட்வீட் போட்டு இருந்தார். மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களுக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி அவர்கள் “நான் சிரித்தால்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பாக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தயாரித்து வருகிறார்.
மேலும், இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா அவர்கள் தான் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக ‘தமிழ் படம் 2’வில் நடித்த ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். அதோடு பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.