வாணி போஜனை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயின் ஆனார் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.

0
3173
nakshatra
- Advertisement -

முன்னெல்லாம் வெள்ளித் திரையில் இருந்து தான் சின்னத்திரைக்கு நடிகர்கள் வருவார்கள். ஆனால், தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். சமீபகாலமாக சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் பல பேர் வெள்ளித்திரைக்கு சென்று பல படங்களில் நடித்து கலக்கி கொண்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இது போன்று தான் சமீபத்தில் தெய்வமகள் சீரியல் சத்யா என்கிற வாணி போஜன் அவர்கள் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் சின்னத்திரை நயன்தாராவாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தார். இப்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சிரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் அவர்களும் தமிழில் நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு உள்ளார்.

-விளம்பரம்-
Image result for lakshmi stores

- Advertisement -

இந்த வரிசையில் தற்போது நம்ம பஞ்சு மிட்டாய் நட்சத்திரா நாகேஷ் அவர்கள் வெள்ளித்திரையில் ஜொலிக்க போகிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நட்சத்திர நாகேஷ். அதற்கு பிறகு இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பொது விழாக்கள், சினிமா விழாக்கள்,சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சீரியல் நடிகை ஆனார்.

இதையும் பாருங்க : இந்த மாதிரி நடந்துக்காதீங்க. மதுமிதாவை தொடர்ந்து சம்பள பிரச்சனை குறித்து பேசியுள்ள சரவணன்.

லட்சுமி ஸ்டோர் சீரியல் மூலம் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் சேர்த்து உள்ளார் நடிகை நட்சத்திர நாகேஷ். மேலும், இவர் லட்சுமி ஸ்டோர் சீரியலில் பாக்கிய லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவரை ‘பஞ்சு, பட்டர் பிஸ்கட்’ என்று தான் ஹீரோ அழகாக கொஞ்சுவார். அதனாலேயே ரசிகர்கள் எல்லோரும் இவரை பஞ்சு என்று தான் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். தற்போது நடிகை நட்சத்திரா நாகேஷ் அவர்கள் “வணிகன்”என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகில் வலம் வரப் போகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்தின் கதாநாயகனாக ஆனந்த் நாக் நடிக்கிறார். மேலும், வி.பி.டேனியல் அவர்கள் இந்த வணிகன் படத்தை இயக்குகிறார். சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோரும் இப்படத்தில் இணைந்து உள்ளனர்.

-விளம்பரம்-
Image result for lakshmi stores nakshatra

இந்த படத்திற்கு சுரேஷ் குமார் இசையமைத்து உள்ளார். அகஸ்டின் இளையராஜா ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறியது, இந்த படம் ஒரு எதார்த்தமான த்ரில்லர், ஆக்ஷன் படமாகும். தற்போது சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை தான் மையமாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை கேட்டு யுவன் சங்கர் ராஜா அவர்களை பாராட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல் யூ 1 ரெகார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ, உரிமையை வாங்கியிருக்கிறார். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறினார்.

Advertisement