அதிக சம்பளம் கேட்ட அனிருத்..! கை நழுவிப்போன சிவகார்த்திகேயன் படம்.!

0
219

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்திலும், ‘ஓகே ஓகே’ பட இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Sivakarthikeyan

இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ள அந்த படத்தை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், இந்த படத்தில் “வேலைக்காரன்” படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், ஹிப் ஹாப் ஆதிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்தைதான் இந்த படத்திற்கு கமிட் செய்ய இருந்தார்களாம் ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டததால் அந்த வாய்ப்பு ஆதிக்கு கிடைத்துள்ளது. அதே போல அனிருத் கேட்ட சம்பளத்தில் கால்வாசி சம்பளம் தான் ஹிப் ஹாப் ஆதி கேட்டதால், அவரையே இந்த படத்தின் இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டது ஸ்டூடியோ கிறீன் நிறுவனம்.

aadhi

மேலும், அனிருத் ஏற்கனவே நடிகர் சிவகார்திகேயனின் ‘எதிர் நீச்சல், மான் காரத்தே, காக்கி சட்டை ,ரெமோ, வேலைக்காரன் ‘ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து விட்டார். இதனால் தற்போது நடிகர் சிவகார்திகேயனின் 13வது படமான இந்த படத்தின் அனிருத்துக்கு பதிலாக ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவிருப்பது ரசிகர்களுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.