ஆனஸ்ட் ராஜ் பட நடிகையா இது.? வாழ்வில் நடந்த சோகமான சம்பவம்.! புகைப்படம் உள்ளே !

0
1783
Aamani-honest-raj

சமீப காலமாக சினிமா நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல நடிகைகள் சினிமா துறையில் பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று குற்றசாட்டை வைத்து வருகின்றனர்.

Aamani

- Advertisement -

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது மட்டுமல்ல, 90 ஸ் கால கட்டத்திலும் இருந்துள்ளது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் 90ஸ் கால கட்டத்தில் சினிமாவில் நடித்து வந்த பிரபல நடிகை ஆமினி, தெலுகு மற்றும் தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

நடிகை ஆமனி, 1990 ஆம் தமிழில் வெளியான “புதிய காற்று ” படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமான இவர். அதன் பின்னர் தமிழில் “ஹானஸ்ட் ராஜ், புதையல்” போன்ற சில படங்களில் நடித்துளளார். மேலும், தெலுங்கில் இவர் பல படங்களிலும் நடித்து முன்னணி ஹெரோயினாக வலம் வந்தவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆமனியிடம் தெலுங்கு சினிமாவில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

Aamani actress

actress aamani

இதுகுறித்து பதிலளித்த நடிகை ஆமனி”தெலுகு சினிமாவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி புதிய நிறுவனித்திடம் இருந்து போனில் அழைப்பு வரும். அதில் என்னை அவர்களது விருந்தினர் மாளிகைக்கு அழைப்பார்கள். ஆனால், அவர்கள் எதற்காக அழைக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்ததால் நான் செல்ல மறுத்துவிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement