அழகை காணவே குவியும் கூட்டம் – ஒரு திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு நடிகை ஹனி ரோஸ்க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
899
Honeyrose
- Advertisement -

தன்னுடைய அழகிற்கு காரணம் அறுவை சிகிச்சை தான் என்று பரவிய வதந்திக்கு ஹனி ரோஸ் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பாதிப் பேருக்கு மேல் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட மலையாளத்தில் இருந்து வந்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ்.

-விளம்பரம்-

இவர் தமிழில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் ஜீவா நடித்த சிங்கம் புலி, சலங்கை துரை நடித்த கந்தர்வன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின் நடிகை ஹனிரோஸ் அவர்கள் மலையாள படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

ஹனி ரோஸ் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் படங்களில் நடிக்கும் போது பல துன்பங்களை அனுபவித்து இருந்ததால் தான் தமிழில் நடிக்கவில்லை என்று ஒரு முறை பேட்டியில் ஹனி ரோஸ் கூறி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பின் இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கோபிசந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பாலகிருஷ்ணா நடித்து இருந்தார்.

வீர சிம்ஹா ரெட்டி படம்:

இப்படத்தில் நடிகை சுருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதோடு இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிகை ஹனி ரோஸ் நடித்து இருப்பது தான் ஆச்சரியம். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. படங்களில் நடிப்பதை விட ஹனி ரோஸ் கடை திறப்பு விழாக்களுக்கு தான் அதிகம் சென்று வருகிறார்.

-விளம்பரம்-

கடை திறப்பு விழாவிற்கு வாங்கும் சம்பளம் :

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் மார்கப்பூர் என்ற பகுதியில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் நடிகை ஹனி ரோஸ் பங்கேற்றிருந்தார். இதற்காக ரூ. 50 முதல் ரூ.60 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுபோல கேரளா மாநிலத்தில் திறப்பு விழாக்களில் பங்கேற்கும்போது ஆந்திரா போல் அல்லாமல் மிக குறைவாகவே சம்பளமாக பெறுகிறாராம்.

அனி ரோஸ் அளித்த பேட்டி:

மேலும், ஹனி ரோஸின் அழகை காணவே பல ரசிகர் கூட்டம் குவிக்குறது. மேலும், ஹனி ரோஸ் தனது அழகிற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று கூட விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதில் அளித்த அவர், நான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. சில பவுடர்களை மட்டுமே வைத்து என்னுடைய அழகை பராமரிக்கிறேன். அதோடு கடவுள் தந்த அழகை தவிர என்னிடம் எதுவும் இல்லை. அழகை பராமரிக்க இவை அனைத்துமே கண்டிப்பாக தேவை. நடிகையாக இருந்து கிளாமர் துறையில் பணியாற்றுவது என்பது எளிதான விஷயம் அல்ல. நம் உடலை பராமரிப்பது பெரிய விஷயம். நம் உடலை அழகாக படைப்பது கடவுளே என்று கூறியிருந்தார்.

Advertisement