பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் இறந்த வாயில்லா ஜீவன் – மணிரத்னம் மீது FIR

0
2521
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வித்யாசமான கதைகளை எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர் வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக எடுத்து உள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து படத்தை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-
A sneak peek into photos from the shooting of Ponniyin Selvan | The Times  of India

அதோடு ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும், மணிரத்னம் அவர்கள் தற்போது பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி உள்ளார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த இரண்டு பாகத்தையும் மணிரத்னம் அவர்கள் தற்போது முடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க ராஜா காலத்து கதை என்பதால் இந்த படத்தில் நிறைய குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இதனால் நிஜ குதிரைகள் சிலவற்றை வைத்தே படப்பிடிப்புகள் நடத்தினார். மேலும், கடந்த மாதம் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஒரு சிறு விபத்து ஏற்பட்டது. அது என்னவென்றால், அந்த விபத்தில் ஒரு குதிரை இறந்து உள்ளது. இது குறித்து மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்னம் மீதும் அந்த குதிரையின் குதிரையின் உரிமையாளர் மீதும் வழக்குப் போட்டுள்ளார்.

Ponniyin Selvan Mani Ratnam shoot spot horse Suhasini Pondicherry

இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரியம் இதை விசாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியுள்ளனர். தற்போது இந்த தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் இதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement