தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி -நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
பாரதிராஜா திரைப்பயணம்:
அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். இதனிடையே இவர் படத்தில் தன்னுடைய மகன் மனோஜை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் நடிகரும் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ்
காலமானார். இவருடைய இறப்பு பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்தது.

பாரதிராஜா உடல்நிலை:
தன்னுடைய மகனின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் மன வேதனையில் இருந்தார். அதற்கு பிறகு தான் பாரதிராஜா மலேசியாவில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டிற்கு சில மாதங்கள் ஓய்வெடுக்க சென்றிருந்தார். சமீபத்தில் தான் பாரதிராஜா சென்னை வந்தார். பின் இவருடைய உடல் நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனையில் கடந்த மாதம் கடைசியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை அறிக்கை:
இது அடுத்து சோசியல் மீடியாவில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், பாரதிராஜா அவர்கள் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்கள் மருத்துவ நிபுணர் குழுவினரால் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. இருந்தாலும் மூச்சு விடுவதில் அவருக்கு சிரமமாக இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.






