பொங்கல் ரேஸில் இத்தனை படங்களா ! ரேஸில் விலகப்போகும் படம் எது ?

0
1097
Pongal films

கடந்த சில வருடங்களாகவே பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்து வருகிறது. அதிலும் விஜய் அஜித் போன்ற பெரிய ஸ்டார் படங்களின் வருகை என்றால் அந்த பொங்கலுக்கு அவர்களின் படங்கள் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்தது.

ஆனால், இந்த வருடம் பொங்கலுக்கு வர நிறைய படங்கள் தயாராக இருக்கின்றன. முதலில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அடுத்தடுத்து படங்கள் வரிசையாக நிற்கின்றன.

விமலின் மன்னர் வகையறா, சண்முக பாண்டியனின் மதுர வீரன், பிரபு தேவாவின் குலேபகாவலி, அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என பல படங்கள் வரிசையில் நிற்க, லேட்டஸ்ட்டாக விக்ரமின் ஸ்கெட்ச் படமும் பொங்கல் ரேசில் ஓட வருகின்றது.

இதையும் படிக்கலாமே:
ஏழை குழந்தைகளுக்காக விஜய் ரசிகர்கள் நடத்தும் இலவச பள்ளி !

நேற்று விக்ரமின் இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கண்டிப்பாக இது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் வெறும் 1000 தியேட்டரில் இந்த 6 படங்களும் வருகிறது என்றால் அது சற்று சிக்கல் தான். இதனால் சில படங்கள் பொங்கல் ரிலீஸை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.