கைதி படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க போவது இந்த டாப் கிளாஸ் ஹீரோவா ?

0
2440
kaithi

கடந்த ஆண்டு மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் கைதி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் இல்லை. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படமாக இருக்கிறது. சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி.

Image result for kaithi

- Advertisement -

கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரை அரங்கிற்கு வந்தது. கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கைதி படத்தில் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் ஆக்டர் ரித்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரித்திக் ரோஷன். இவருடைய நடிப்பில் வெளி வந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் தான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த வார் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. மேலும், இந்த படத்தை இந்தியிலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்ற படத்தை மும்முரமாக எடுத்துக் கொண்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

-விளம்பரம்-
Image result for Hrithik roshan movies

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாஸ்டர் படம் முடிந்த பிறகு தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஹிந்தியில் கைதி படத்தை ரீமேக் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement