யாரடி நீ மோகினி’ சீரியலில் இருந்து விலகினார் சஞ்சீவ்..! காரணம் இதுதான்.! வெளிவந்த உண்மை

0
4006
Actor sanjeev
- Advertisement -

ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’. சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடிக்கிறார்கள். இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே தொடர் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் சிலாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலை நாள் தவறாமல் பார்த்து வருகிறவர்களுக்கு இன்று (8/5/18) ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

-விளம்பரம்-

sanjeev

- Advertisement -

அது… இதுநாள் வரை முத்தரசனாக நடித்துவந்த சஞ்சீவ் தொடரிலிருந்து வெளியேற, புது முத்தரசனாக என்ட்ரி கொடுக்கவிருக்கிறார், ஶ்ரீ. ஆம், இந்தத் தொடரின் ஹீரோ மாறுகிறார்.

250 எபிசோடுகளைக் கடந்து டாப் கியரில் போய்க்கொண்டிருக்கும் தொடரிலிருந்து ஹீரோ ஏன் வெளியேறுகிறார்? தொடரின் யூனிட் தரப்பில் விசாரித்தோம்.

-விளம்பரம்-

“பொதுவாகவே சீரியல்கள்ல ஹீரோக்கள் சும்மா ஒப்புக்காகத்தான். ஒண்ணு ஹீரோயின் டாமினேட் பண்ணுவாங்க. அல்லது வில்லி டாமினேட் பண்ணுவாங்க. இந்தத் தொடருக்கு சஞ்சீவைக் கமிட் செய்தபோது, ‘அந்த மாதிரி டம்மி ஹீரோவா என்னால பண்ண முடியாது; கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தா மட்டும் கூப்பிடுங்க’னு சொல்லியிருக்கார். ‘இல்ல… இந்தத் தொடர்ல ஹீரோ, ஹீரோயின், வில்லி எல்லோருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கு. ஏன்னா, இது வித்தியாசமான சீரியல்’னு சொல்லி நடிக்க சம்மதிக்க வெச்சிருக்காங்க. முதல் 100 எபிசோடுகள் பிரச்னை இல்லாம போச்சு. பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிரச்னை ஸ்டார்ட் ஆச்சு. முத்தரசன், ஹீரோயின் வெண்ணிலா ரெண்டு பேரோட கேரக்டர்களைவிட, வில்லி சைத்ரா கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டதா சஞ்சீவ் நம்பத் தொடங்கினார். அதாவது, இவங்க ரெண்டுபேரும் இல்லாமகூட ஒரு எபிசோடு வரலாம், ஆனா சைத்ரா வராத எபிசோடே இருக்காதுங்கிற பேச்சு எழவே, அது சஞ்சீவை எரிச்சல் அடைய வைத்ததா சொல்றாங்க. இதைப்பத்தி புரொடியூசர், சேனல் தரப்புக்கும் சஞ்சீவ் சொன்னதா சொல்றாங்க. அவங்ககிட்ட இருந்து என்ன பதில் வந்ததுனு தெரியலை. இப்போ திடீர்னு சஞ்சீவ் வெளியேறிட்டார்” என்கிறார்கள்.

புதிய ஹீரோவாக வந்திருக்கும் ஶ்ரீயிடம் பேசினோம்.
இதே சேனல்ல ஏற்கெனவே ‘தலையணைப் பூக்கள்’, ‘தேவதையைக் கண்டேன்’னு ரெண்டு சீரியல்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். ‘தலையணைப் பூக்கள்’ல என் கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிச்சது. இப்போ திடீர்னு ‘யாரடி நீ மோகினி’க்கு கூப்பிட்டிருக்காங்க. மூணு சீரியல்னு வர்றப்போ கால்ஷீட் பிரச்னை வரும்கிறதால, ‘தலையணைப் பூக்கள்’ தொடர்ல இருந்து விலகிட்டேன். முத்தரசன் கேரக்டர் சஞ்சீவ் நடிச்ச வரைக்கும் வேற மாதிரி இருந்திருக்கும். அந்த ஃபீல் மாறாம நேயர்கள் என்னை ஏத்துக்கணும். அதுக்கு என்னால முடிஞ்சதைப் பண்ண ரெடி ஆகிட்டேன்.

sree

மத்தபடி, சஞ்சீவ் ஏன் வெளியேறினார்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவனும் நானும் முதல் வகுப்புல இருந்து ஒரே ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவங்க. அவங்க அம்மாவும் என்னோட அம்மாவுமேகூட ஸ்கூல் மேட்ஸ். அதேபோல ஒரே சீரியல்ல, ஆனா அவனோட சேர்ந்து நடிக்கற வாய்ப்பு அமையாம, அவனோட இடத்துக்கு நான் வர்ற மாதிரி அமைஞ்சிருக்கு. இதை எப்படி எடுத்துக்கிறதுன்னே எனக்குத் தெரியலை. ஆனா, இன்னைக்கும் ரெண்டுபேரும் நண்பர்கள். அதை இந்த நேரத்துல நான் பதிவு பண்ண விரும்புறேன்” என்கிறார், ஶ்ரீ.

சீரியலின் இயக்குநர் ப்ரியனோ, ‘சில சினிமா வாய்ப்புகளால தொடர்ந்து சீரியலுக்குத் தேதி கொடுக்க முடியாத நிலையில இருக்கேன்’னு எங்ககிட்டச் சொன்னார். சஞ்சீவ் சீரியல்ல இருந்து வெளியேற வேறு ஏதும் காரணம் இருக்கான்னு எனக்குத் தெரியலை’ என்கிறார்.

சஞ்சீவைத் தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறது அவரது மொபைல்.

Advertisement