ஜெர்சியை மாத்துங்க.! கடுப்பான காலா பட நடிகை.! இவங்களுக்கு கூட புடிக்கல போல.!

0
1928
India-Orange
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

-விளம்பரம்-
huma-qureshi

நேற்றைய போட்டியில் இந்திய அணி வழக்கத்திற்கு மாறாக ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து விளையாடினர். இதற்கு முக்கிய காரணம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நேற்றைய போட்டியின் மொத்த வருமானம் குழந்தைகள் கல்வி செலவிற்காக யுனிசெப் நிறுவனத்தின் வழங்க போட்டி நிர்வாகம் முடிவெடுத்தது.

இதையும் பாருங்க : மீண்டும் ஒன்றாக சந்தித்த 7 ஜி காலனி ஜோடி.! இப்போ எப்படி இருகாங்க பாருங்க.! 

- Advertisement -

நல்ல எண்ணத்திற்காக இந்திய அணி காவி நிற உடையை அணிந்து விளையாடிய போதும். இந்திய அணி காவி உடை அணிவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பா ஜ க தனது சர்வாதிகாரத்தை திணிக்கிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இதனால் சமூக வலைதளத்தில் பலரும் இந்திய அணி காவி உடை அணிந்ததால் தான் தோல்வியடைந்தனர் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையும் காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹுமா குரேஷி இந்திய அணியின் காவி உடையை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மூடநம்பிக்கை எல்லாம் இல்லை. எங்களுடைய ப்ளூ ஜெர்சி தான் திரும்ப வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement