மணிமேகலையின் காதல் திருணத்துக்கு லாரன்ஸ் தான் காரணம்- எப்படி தெரியுமா !

0
2333

சம் மியூசிக் மற்றும் சன் டீவீயில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தற்போது தனது அப்பாவை மீறி தனது காதலன் ஹுசைனுடன் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துள்ளார்.
anchor Manimegalaiஇவரது காதல் தெரிந்து வீட்டில் சம்மதிக்கவில்லை இதனால் திடீரென இந்த முடிவை எடுத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் இவருடைய பல ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

மேலும், இந்த திருமணத்திற்கு காரணம் லாரன்ஸ் தான். ஏனெனில், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஹீசைன் டான்ஸ் ஆடிய போது அவரை நேரில் பார்த்தேன், நன்றாக ஆடினார். இதனால் அவரது நம்பர் வாங்கி அவரை பாராட்டினேன்.
பிரபல ஆன்கர் என்பதால் சிறிது நேரம் பேசுவார் என நினைத்தேன் ஆனால் நன்றி எனக் கூறிவிட்டு உடனடியாக போனை வைத்துவிட்டார். பின்னர் எனக்கு அவரை பிடித்து போய் விட்டது.

அவருடன் நண்பனாக பேசி பழகினேன். ஒரு முறை அவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அவரை அப்போது ரொம்ப மிஸ் செய்து பார்க்க நினைத்தேன். உடனடியாக காரிலேயே ஹைதராபாத் சென்றுவிட்டேன்.
அங்கு அவரை பார்த்ததும் ப்ரோபோஸ் செய்துவிட்டேன். தற்போது அவர் வேறு மதம் என்பதால் வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துவிட்டேன் எனக் கூறினார் மணிமேகலை. எப்படியோ மொட்ட சிவா கெட்ட சிவா படத்தினால். ஒரு ஜோடியை சேர்த்து வைத்துவிட்டார் லாரன்ஸ்.