சூப்பர் ஸ்டாரின் நீண்டநாள் நண்பர் மறைவு – ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி.

0
408
rajini
- Advertisement -

தென்னிந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. ரஜினிகாந்ந் திரை வாழ்க்கையை தொடங்கியது முதலே தன்னுடைய கடின உழைப்பின் தொடங்கியது படிப்படியாக வில்லன் நடிகரில் இருந்து இன்று இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தன்னை தெரியும் படி பிரபலமாகியுள்ளவர்தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், வசந்த ரவி, யோகிபாபு, விநாயகன் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படமானது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு திரையில் வெளியாகும் எனக்க தகவல்கள் கிடைத்துள்ளன. சினிமாவில் நடித்து வந்த 90ஸ் காலத்திலேயே அரசியலில் களமிறங்கிய ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களில் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார்.

- Advertisement -

சுதாகர் :

இந்நிலையில் ஒரு சார்பு ரசிகர்கள் இதற்கு இந்நிலையில் ஆதரவு தெரிவித்து பெரியளவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடைய ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார்கள். இப்படியிருக்கும் போதுதான் திடீரென ரஜினிகாந்த் தான் அரசியலில் களமிறங்க போவதில்லை என்று கூறியதால் இவரின் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த அவர்களிடம் நீண்டநாள் பணியாற்றி வந்த சுதாகர் என்பவர் மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். அதோடு ரஜினிகாந்தின் நெருங்கிய நம்பரும் கூட.

முழு செலவையும் ஏற்ற ரஜினிகாந்த் :

இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் ரஜினிகாந்த் சுதாகருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சசுதாகரே பின்னாளில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு என்னுடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் ரஜினிகாந்த் அவர்கள் தான் பார்த்து கொள்கிறார் என்றும் வீணாக அவர் மீது குற்றம் சாட்ட விரோதிகள் வதந்திகளை பரப்புகின்றனர் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

நேரில் ரஜினிகாந்த் அஞ்சலி :

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு தற்போது 71 வயதாகிறது. இவரின் மறைவுக்கு ரஜினிகாந்த் நற்பணி மற்றம் சார்பிலும், ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பிலும் பாலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் சுதாகருடைய வீட்டிற்கு நேரடியாகவே சென்று சுத்தகருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ட்விட்டர் பதிவு :

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த கூறியது `சுதாகர் என்னுடைய நீண்டகால நண்பர். அவரை தற்போது இழந்து விட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு முன்னதாகவே சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

Advertisement