இந்த நிகழ்ச்சியில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டாலும், திரையில் இல்லாமல் வந்தவர் ஜூலி. இவரை நம் அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மிக மிக மோசமாக விமர்சிக்கப்பட்டவர் ஜூலி.
என்ன நடந்தால் எனக்கென்ன என, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து தனது அடுத்த கட்ட திரை வாழ்வை ஆரம்பித்து விட்டார். தற்போது கலைஞர் டீவியில் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சிக்கு சில லட்சங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
தற்போது, இந்த ஜூலி ஒன்றும் நாம் அனைவரும் வெறுக்கும் அளவிற்கு தவறானவர் கிடையாது என காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
'
இதையும் படிங்க: விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின்..! சிவகார்த்திகேயனுக்கு வில்லியானார்- யார் அந்த நடிகை
ஜூலியை எனக்கு ரொம்ப பிடிக்கும், நாம் அனைவரும் ஒரு சேர வெறுக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிய தவறு செய்துவிடவில்லை, பொய் மட்டும் தான் கூறுகிரார், நாம் அனைவரும் தான் பொய் கூறுகிறோம், அதில் பெரிய தவறு ஏதும் இல்லை'
எனக்கூறினார் நாஞ்சில் விஜயன்




