என்னை திருமணம் செய்து கொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்தார்- நடிகை மீது நடிகர் பகீர் புகார்

0
75911
lavanya

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை லாவண்யா திரிபாதி. தமிழில் சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இதனைத் தொடர்ந்து இவர் சி.வி.குமார் இயக்கத்தில் மாயவன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. இவர் நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்து வருகிறார். அதோடு நடிகை லாவண்யா இந்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் இருப்பவராக நடிக்கிறார் தகவல் வெளியாகி உள்ளது. இவரை ஒரு கும்பல் திடீரென்று கடத்திச் செல்ல, ஹீரோ காப்பாற்றுவது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்து கொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை லாவண்யா மீது பொய்யான புகார் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பிரபல நடிகர் சுனிசித் என்பவர் தனக்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும், இதனால் நடிகை லாவண்யா திரிபாதி மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகர் சுனிசித் பேட்டி அளித்துள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் தமன்னா உட்பட சில நடிகைகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், என்னை லாவண்யா திரிபாதி திருமணம் செய்துகொண்டார் என்றும் தற்போது என்னை விட்டு அவர் பிரிந்து இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். இதனை கேட்ட நடிகை லாவண்யா அவர்கள் கொந்தளித்துப் போனார்.

பின் இந்த மாதிரி எந்த ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்றும் நடிகை லாவண்யா கூறியிருந்தார். இதை இப்படியே விட்டால் சரியாகாது என்று சொல்லி காவல்துறையிடம் தன் மீது தவறான புகாரை கொடுத்துள்ள நடிகர் சுனிசித் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த நடிகர் மீது சைபர் கிரைம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement