கொரோனா பாதிப்பு, தன் வீட்டில் வேலை செய்வோருக்கு நடிகர் கிருஷ்ணா செய்து வரும் உதவி.

0
1574
krishna

கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் பயங்கர பீதியில் உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

இந்த கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.

- Advertisement -

இதையும் இதையும் : என்னை திருமணம் செய்து கொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்தார்- நடிகை மீது நடிகர் பகீர் புகார்

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கல்விக் கூடங்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவரும் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நடிகர் கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கொரோனா வைரஸை யாரும் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்வும் . அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறினார். இப்படி இவர் பதிவிட்ட கருத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் கூறியிருப்பது, உங்களுக்கு என்ன கோடிக்கணக்கில் வைத்திருப்பீர்கள். உட்கார்ந்து சாப்பிடுவீர்கள். ஏழை என்ன பண்ணுவார்கள்? என்று கேள்வி கேட்டு உள்ளார்.

இதற்கு நடிகை கிருஷ்ணா அவர்கள் பதில் அளித்துள்ளார். அதில், என்னை சார்ந்திருக்கும் டிரைவர், பணியாளர்கள், வாட்ச் மேன் உள்ளிட்ட பலரை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும் உங்களை சார்ந்து இருப்பவர்களை பார்த்துக் கொண்டால் நல்லது தான் என்று பதிலளித்து உள்ளார். கிருஷ்ணாவின் இந்த பதிவு பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், பலர் இவருடைய கருத்துக்கு பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

Image result for actor krishna dhanush

தமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணா. இயக்குநர் விஷ்ணுவர்தனின் இவருடைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கழுகு திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்த படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த மாரி 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இவர் கழுகு இரண்டாம் பாகம் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்து உள்ளார்.

Advertisement