விஜயகாந்த சார் என்னை தூக்கி சுத்துனாரு, நான் பயந்துட்டேன் ! பிரபல நடிகை – யார் தெரியுமா ?

0
1293
- Advertisement -

15 வருட அனுபவத்தில், மூன்று மொழிகளில் பல படங்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொரு கேரக்டரும் மறக்கமுடியாத மெமரீஸ்” எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை மீனா குமாரி. சன் டி.வி ‘சந்திரலேகா’ சீரியலில் நடித்துவருபவர்.

meenakumari

என் பூர்வீகம், ஆந்திரா. சினிமா ஒளிப்பதிவாளரான என் உறவினர் மூலம், `கருப்பு நிலா’ படத்தில் வாய்ப்பு கிடைச்சது. விஜயகாந்த் சாருக்கு தங்கச்சியா நடிச்சபோது, பிளஸ் ஒன் படிச்சுட்டிருந்தேன். விஜயகாந்த் சார் தன் முதுகில் என்னைக் கட்டிக்கிட்டு சண்டைப் போடறதும் நானும் சண்டைப் போடுறதும் படத்தில் அல்டிமேட்.

- Advertisement -

அவரின் தலைக்கு மேலே என்னைத் தூக்கி சுத்தினப்போ பயந்துட்டேன். முதல் படத்திலயே ஆக்‌ஷன் காட்சியில் நடிச்சது த்ரில்லிங்கா இருந்துச்சு. அப்போ எனக்குத் தமிழ் சரியா தெரியாது. போகப் போக தமிழ் இன்டஸ்ட்ரி எனக்குப் பரிட்சையமாகிடுச்சு. அந்தப் படத்தில் ஶ்ரீவித்யா அம்மா, எனக்குத் தாய் கேரக்டர். மொழி, மேக்கப், ஆக்டிங்னு நிறைய விஷயங்களை அவங்க சொல்லிக்கொடுத்தாங்க.

Advertisement