மற்ற ஹீரோக்களுக்கு ஓகே. ஆனால்,விஜயுடன் அப்படி நடிக்க மாட்டேன். ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி.

0
67341
vijay-ayswarya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

Image result for namma veetu pillai

- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் குறித்து பேசியுள்ளார்.

இதையும் பாருங்க : அதித்ய வர்மா படத்தில் விக்ரம் நடித்த காட்சி தெரியுமா? துருவ் வெளியிட்ட சூப்பர் வீடியோ

-விளம்பரம்-

அதில், மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன், ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன். எனக்கு விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார். அதே போல தற்போது நடித்து வரும் வானம் கொட்டட்டும் படத்திலும் விக்ரம் பிரபுவின் தங்கையாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே, வானம் கொட்டட்டும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், சாவித்ரா அம்மா, ராதிகா மேடம்க்கு பிறகு இப்போ நான் தான் தங்கச்சி கதாபத்திரம் பன்றேன். காக்கை முட்டை படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 22 வயசு தான். ஆனால், என்னை தவிர வேறு எந்த நடிகையாவது அந்த வயதில் நடித்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement