அதித்ய வர்மா படத்தில் விக்ரம் நடித்த காட்சி தெரியுமா? துருவ் வெளியிட்ட சூப்பர் வீடியோ

0
49874
vikram
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் திரை உலகில் தனெக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். இவரை “சியான் விக்ரம்” என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். விக்ரம் தனது கடின உழைப்பு மூலம் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் கடைசியாக கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் தான் இயக்க உள்ளார். இந்நிலையில் விக்ரம் மகன் துருவ் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தன்னுடைய ஆதித்ய வர்மா படத்தில் தன் தந்தை நடித்த காட்சியை பதிவிட்டு உள்ளார்.

-விளம்பரம்-

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பாலா முதலில் இயக்கினார். பின் பாலா காரணங்களால் பாலா அந்த படத்தை கைவிட்டார். பின் இந்த படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்து இருந்தார். கிரிசாயா என்பவர் தான் ஆதித்ய வர்மா படத்தை இயக்கியவர். ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ரதன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் உண்மைக் காதல் உணர்வுகளையும், வலிகளையும் அழகாக எடுத்துச் சொல்கிற கதை.

- Advertisement -

இதையும் பாருங்க : துள்ளாத மனமும் படத்திற்கு முதலில் வைத்த பெயர், முதலில் நடிக்க இருந்த நடிகர், நடிகை இவர்கள் தான்.

இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமில்லாமல் துருவ் இந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் துருவ் நடிப்பு முதல் படம் மாதிரியே இருக்காது. அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்திருந்தார். அனுபவமிக்க நடிகரைப் போல நடித்திருந்தார் என்று ரசிகர்களும், பிரபலங்களும் துருவ்வை பாராட்டினார்கள். சமீபத்தில் கூட ஆதித்ய வர்மா படத்திற்காக துருவ்க்கு விருது கிடைத்தது. இந்த நிலையில் துருவ் அவர்கள் விக்ரம், ஜூனியர் கலைஞர்களுடன் சேர்ந்து ஆதித்ய வர்மா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பங்கு வகித்திருந்தார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B8RPl8_HBSE/

ஆதித்ய வர்மா படத்தில் தூரம் என்ற ஒரு பாடல் வரும். அந்த பாடலில் பனிதா சந்து, துருவை சந்திக்க வந்திருப்பார். அப்போது ஒருவர் உங்களை பார்க்க ஒரு நபர் வந்திருக்கிறார் என்று கூறுவார்கள். அது வேறு யாருமில்லை சியான் விக்ரம் தான். தன்னுடைய மகனுக்காக இந்த படத்திற்காக பயங்கரமாக உழைத்துள்ளார். விக்ரம் தன்னுடைய படங்களை குறித்துக் கூட கவலை கொள்ளாமல் தன்னுடைய மகன் படத்துக்காக பல போராட்டங்களை செய்துள்ளார். உண்மையில் சொல்லப்போனால் விக்ரம் காட்பாதர் தான். ஆதித்ய வர்மா படத்தில் விக்ரம் ஒரு சின்ன இந்த காட்சியில் கூட தோன்றி இருக்க மாட்டார். ஆனால், தனது மகனுக்காக இந்த படத்தில் அதிக பங்கு வகித்து உள்ளார்.

Advertisement