சிறு பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ‘இது கதை அல்ல நிஜம்’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
451
- Advertisement -

இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இது கதை அல்ல நிஜம். இந்த படத்தில் சந்தோஷ் சரவணன், அனிகா விக்ரமன், சோனு லட்சுமி, ஜெகன், ஆர்.வி.உதயகுமார், கோவை சரளா, சென்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தாஜ் நூர் இசையமைத்திருக்கிறார் மற்றும் ராஜதுரை ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இது கதையல்ல நிஜம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆர் வி உதயகுமார் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருடைய மகன் ஜெகன், மகள் அனிகா விக்ரமன். இவர்களோடு ஆதரவற்ற நிலையில் இருக்கும் சந்தோஷ் சரவனையும் அவர் எடுத்து வளர்க்கிறார். மூவரும் குழந்தைகளாக இருக்கும்போதே போலீஸ்காரரான ஆர் வி உதயகுமார் இறந்து விடுகிறார். பின் அவருடைய மகன் ஜெகன் வளர்ந்த பிறகு போலீசாகிறார். அதே போலீஸ் நிலையத்தில் எடுத்து வளர்க்கும் சந்தோஷ் சரவணன் எடுபிடியாக வேலை செய்கிறார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் சந்தோஷ் சரவணன் அனிகாவை தன்னுடைய தங்கையாக பார்க்கிறார். ஆனால், சந்தோஷ் மீது அனிகாவுக்கு காதல் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் அதே ஊரை சேர்ந்த சோனு லட்சுமிக்கும் சந்தோஷ்க்கும் இடையே காதல் மலர்கிறது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஜெகன் முயற்சிக்கிறார். இதனால் அனிகா விக்ரமன் விபரீதமான முடிவு எடுக்கிறார். அதற்கு பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் மீதி கதை.

படத்தின் நாயகன் சந்தோஷ் சரவணன் துடிப்பான, துருதுருவென இளைஞராக வருகிறார். இவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் கட்சியில் இவருடைய நடிப்பு பாராட்டை பெறுகிறது. இவரை அடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஜெகன் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. அண்ணனாக நினைக்க வேண்டியவன் மீது தன்னுடைய தங்கை கால்கள் செய்வதை அறிந்து அவர் வருத்தப்படும் காட்சிகள் எல்லாம் நன்றாக அமைந்திருக்கிறது.

-விளம்பரம்-

தங்கைக்காக அவர் எடுக்கும் முடிவு கிளைமேக்ஸ் காட்சியில் அதிர வைத்திருக்கிறது. இவரை அடுத்து நாயகியாக வரும் சோனு லக்ஷ்மி கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி இருக்கிறார். அனிகா விக்ரமன் நடிப்பும் நன்றாக வந்திருக்கிறது. இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஆனால், சில காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் சினிமா தனமாக இருக்கிறது.

படத்தை முக்கோண காதல் கதையை மையமாக வைத்து இயக்குனர் இயக்கி இருக்கிறார். இதில் குடும்ப உறவுகளின் உணர்வுகளை சுவாரசியமாகவும், உயிரோட்டமாகவும் காண்பிக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் சொதப்பிக்கிறது. இன்னும் கதைக்களத்தில் இயக்குனர் மெனக்கட்டு இருந்தால் படம் நன்றாக வந்திருக்கும். படத்தின் உடைய பாடல்கள் எல்லாம் சுமாராக இருக்கிறது. ராஜதுரை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக அமைந்திருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக நிறைவு செய்து இருக்கிறார்கள்

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது

முக்கோண காதல் கதையை உயிரோட்டமாக சுவாரசியமாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்

குறை:

சில காட்சிகள் படத்திற்கு செட் ஆகவில்லை

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

குடும்ப உறவுகளின் உணர்வுகளை சுவாரஸ்யமாகவும் உயிரோட்டமாகவும் நேர்த்தியாக படமாக்கி உள்ளார் டைரக்டர் கண்ணன் ராஜமாணிக்கம்.

Advertisement