எப்படி இருக்கிறது மிர்ச்சி சிவாவின் ‘இடியட்’ – முழு விமர்சனம் இதோ.

0
739
idiot
- Advertisement -

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இடியட். தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தான் இடியட் படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹாரர் காமெடி பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்து இருக்கிறார். மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தை சீன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இவர்களுடன் படத்தில் ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இன்று வெளியாகியுள்ள இடியட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

வழக்கம் போல் பேய், பாழடைந்த பங்களா என்று கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள். மற்ற பேய் படங்களைப் போலவே இந்தப் படத்துக்கும் ஒரு பிளாஷ்பேக் வைத்திருக்கிறார்கள். இறுதியில் பேய் பழிவாங்கி செல்வது தான் படத்தின் கதை. கொஞ்சம் கூட கதையில் மாற்றம் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்து வைத்து இருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் பெரும்பாலும் காமெடி காட்சிகள் தான் இருக்கின்றன.

- Advertisement -

அதிலும் படத்தில் நிறைய உருவ கேலி வசனங்கள் வருகிறது. படம் முழுவதும் தங்கதுரை மொக்க ஜோக் போலவே நகைச்சுவை இருக்கிறது. ஒருவேளை இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடித்திருந்தால் இந்த படத்துக்கும் தில்லுக்கு துட்டு 3 என பெயர் வைத்திருப்பார் இயக்குனர். மிர்ச்சி சிவா நாயகனாக நடிப்பதால் தான் பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு படம் தில்லுக்கு துட்டு பாணியில் தான் உருவாகியுள்ளது.

இடியட் என்ற பெயருக்கு ஏற்பவே படத்தை சிரிக்க வைக்க நம்மை முயற்சி செய்திருக்கிறார்கள். கதை என்ன என்பதை மறந்துவிட்டு கதை செல்கிறது. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. கதாபாத்திர வடிவமைப்பும் ரொம்ப மோசமாக உள்ளது. ராம் பாலாவின் முந்தைய படங்களும் அப்படித்தான் இருந்தது என்பதால் இதில் பெரிய குறையாக இல்லை. மேலும், டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளை போலவே இந்த படத்திலும் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். அதனால் பெரிய அளவு நகைச்சுவை இல்லை.

-விளம்பரம்-

இருந்தாலும் இயக்குனர் தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2 படங்களை போலவே சிறப்பாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், இடியட் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லனும். இரண்டாம் பாதியில் ஆனந்தராஜ், ஊர்வசியின் நடிப்பு படத்திற்கு பக்க பலம் சேர்த்துள்ளது. அவர்கள் வரும் காட்சிகள் மட்டும் தான் சிரிக்கும் படியாக இருந்தது என்று சொல்கிறார்கள். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் தங்களுக்கான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் ஹிட்டாகவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

படத்தில் லாஜிக் பற்றி கவலைப்படாமல் முழுக்க முழுக்க காமெடி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருப்பினும் நகைச்சுவை பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் தில்லுக்கு துட்டு படத்தைவிட இந்த படம் நன்றாக மக்கள் மத்தியில் கவர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல் மிர்ச்சி சிவா தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நிக்கி கல்ராணிக்கு டார்லிங் படத்தில் கிடைத்த வரவேற்பு இந்த படத்தில் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும். அந்த அளவிற்கு அவருடைய காட்சிகள் பெரிதும் பேசப்படவில்லை.

நிறைகள் :

வழக்கான நகைச்சுவை பேய் படம்.

லாஜிக் பற்றி யோசிக்காமல் முழுக்க முழுக்க நகைச்சுவை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக உள்ளது.

ஆனந்த்ராஜ், ஊர்வசியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

குறைகள் :

வழக்கமான பேய் கதையை கொஞ்சம் கூட மாற்றாமல் கொடுத்துள்ளார் இயக்குனர்.

தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2 படத்தை அப்படியே ரீமேக் செய்த மாதிரி உள்ளது.

நகைச்சுவையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சில இடங்களில் நகைச்சுவை ரசிகர்களை வெறுப்பேற்றும் படி இருக்கிறது.

கதையிலும், நகைச்சுவையிலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இடியட் – டேலண்ட் ஆக வாய்ப்பில்லை

Advertisement