‘என் தாயும் இப்படித்தான்’ – மோடியின் தாயார் இறப்பு பற்றி இளையராஜா உருக்கமான கடிதம்.

0
537
ilayaraja
- Advertisement -

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா கைப்பட இரங்கல் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர்க்கு தற்போது 100 வயது ஆகியிருந்தது. அகமதாபாத்திற்கு அருகே உள்ள சேரன் கிராமத்தில் பிரதமர் மோடியின் தாயார் குடியிருப்பு உள்ளது. பிரதமர் மோடி அவரது தயிரின் மறைவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்ததை அடுத்து அகமதாபத்திற்கு விரைந்தார்.

-விளம்பரம்-

பிரதமர் மோடியின் தயார் ஹீராபென் பிரதமரின் சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகருக்கு அருகே உள்ள சேரன் கிராமத்தில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காணரமாக நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுபாதிக்கட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் கொண்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று தன்னுடைய தாயாரை மோடி சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்றார்.

- Advertisement -

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டாவது நாள் சிகிச்சை பலனிற்றி அவரது தாய் ஹீராபென் காலமானார். இந்த நிலையில் அகமதாபாத்ற்கு விரைந்த பிரதமர் மோடி. அவரது தாயார் உடல் சேரன் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்த மோடி தன்னுடைய தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தார். பின்னர் தன்னுடைய தாயின் உடலை இறுதி சடங்கிற்று தன்னுடைய தோளில் தூக்கி சென்று உடல் ஊர்தியில் வைத்தார்.

பின்னர் இறுதி சடங்கிற்று அவரது உடல் குஜராத் தலைநகரில் உள்ள காந்திநகரில் சாதாரண முறையில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய தாயார் இறந்ததை ட்விட்டர் பக்கத்தில் காலையில் வெளியிட்ட மோடி உருக்கமாக சில வார்த்தைகளை கூறியிருந்தார். அதில் தன்னுடைய தாய் 100 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு இப்போது இறைவனடியில் இளைப்பாறுகிறார். அம்மாவிடம் நான் கர்மயோகியின் அடையாளதயும், தபஸ்வியின் பயணத்தையும், மதிப்பு அடிப்படையில் வாழ்கை போன்ற மூன்றாயும் கண்டுள்ளேன்.

-விளம்பரம்-

அவரது 100 பிறந்தநாளின் போது அவர் என்னிடம் பல விஷியங்களை கூறியிருந்தார்.அவை வாழ்க்கையை தூய்மையாக வாழ வேண்டும், வேலையை பாத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும் என்ற வார்த்திகளை நான் என்றும் மனதில் வைத்துக்கொள்வேன் என்று அந்த ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார். மேலும் பல பிரபலங்களும் மற்ற கட்சியினரும் தங்களுக்கு இடையே உள்ள வேற்றுமையை மறந்து அம்மா என்ற அடிப்படையில் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இறங்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்து வருகிறனர்

இந்த நிலையில் மோடியின் தாயார் இறப்பிற்கு இரங்கல் கடிதம் ஒன்றை எழுதி இருக்கும் இளையராஜா ” “நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதையும் கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கு காண முடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisement