பொது மேடையில் சங்கரை பற்றி கேள்வி கேட்ட ரோகினி.! கடுப்பான இளைஞயராஜா.! வைரலாகும் வீடியோ.!

0
908

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறைகளாக அனைவரையும் தனது இசையால் கட்டிப்போட்டவர். இவரது பல பாடல்கள் மிகவும் இனிமையாகவும் மென்மையாகவும் நம்மை கவர்ந்தாலும் இவரது கரடுமுரடான குணம், பல விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபக்காரராக இருக்கிறார் இசைஞானி.

சமீபத்தில் இவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டுஅவரை கௌரவப்படுத்தும் வகையில் ‘இளையராஜா 75’என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கர் மற்றும் விக்ரம் மேடையில் இருந்தபோது நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த பிரபல நடிகை ரோகினி ,இசைஞானியிடம் எப்போது ஷங்கருடன் நீங்கள் பணியாற்றுவீர்கள் அதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று ஒரு சாதாரண கேள்வியைத்தான் கேட்டார்.

அதற்கு மிகவும் கடுப்பான இளையராஜா எனக்காக நீ வாய்ப்பு கேட்கிறாயா. இந்தக் கேள்வி மிகவும் தவறான கேள்வி என்று மிகவும் காட்டமாக பதில் அளித்தார்.மேடையில் இருந்த சங்கரும் , விக்ரமும் செய்வதறியாது தர்ம சங்கடத்தில் நின்று கொண்டிருந்தனர்.


இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே ராயல்டி விவரகரத்தில் இளையராஜாவின் பெயர் படு டேமேஜ் ஆகியது. இந்த நிலையில் பொது மேடையில் ஒரு பெண் என்றும் பாராமல் ரோஹினியிடம், இளையராஜா இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளது பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது.