சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் டி. இமான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் டி . இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். குறிப்பாக, அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார்.
இமான் செய்த உதவிகள்:
இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே. முதலில் இவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் வாய்ப்பு அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். தற்போது இவர் மாற்றி திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இமானை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள்.
இமான் அளித்த பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருந்தது, மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அந்த படத்தில் எல்லா பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம்.
சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:
காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் நான் இசையமைப்பாளராக, அவர் நடிகராக இருந்தால் பார்க்கலாம். துரோகம் என்பது நமக்கு தெரியாமல் தான் நடக்கும். அவர் செய்த துரோகத்தை நான் தாமதமாக தான் புரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் அவர் என்னிடம் நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தார். அவரை நானும் நம்பினேன். அதற்கு பிறகு தான் அவர் எனக்கு செய்த துரோகம் தெரிய வந்தது. இதை நான் வேறொருவர் மூலமாக தெரிந்து கொள்ளவில்லை. நானே அனுபவித்து உணர்ந்தேன்.
சிவகார்த்திகேயன் செய்த செயல்:
இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அதற்கு காரணம், குழந்தைகளின் எதிர்காலம் தான். இந்த ஊர் என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என்னை தவறானவன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான் யார் என்று எனக்கு தெரியும். என்னை படைத்தவனுக்கும் என்னை தெரியும். நான் செய்யும் தொழிலுக்கும், என்னை சேர்ந்தவர்களுக்கும், என்னுடைய குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நான் சரியாக இருக்கிறேனா என்பதில் மட்டும் தான் நான் பார்ப்பேன். அதேபோல் சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்திற்கு அவர் மட்டுமே காரணம் கிடையாது. அதில் அவர் ஒரு முக்கியமான ஆள் தான். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார்.