ரெண்டு வருஷம் பெத்த புள்ளைங்கள பாக்கல, அதுக்குள்ள இன்னொருத்தர பிடிச்சி இருக்கீங்க – முன்னாள் மனைவியின் திருமண வாழ்த்து

0
1184
imman
- Advertisement -

இமான் குறித்து அவரது முதல் மனைவி போட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்ன இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்களும் பிறந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக அறிவித்து இருந்தார் இமான்.அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எமலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் இமான்.

-விளம்பரம்-

இந்நிலையில் தனது மறுமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த இமான், மே 15, 2022 ஞாயிற்றுக்கிழமை அமலி உபால்டுடன் (மறைந்த பப்ளிசிட்டி டிசைனர் திரு. உபால்ட் மற்றும் திருமதி சந்திரா உபால்டின் மகள்) எனது மறுமணம் பற்றிய செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சி.எனது கடினமான காலங்களில் வலுவான தூணாக இருந்த எனது தந்தை திரு.ஜே.டேவிட் கிருபாகர தாஸ் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஒரு முக்கிய தீர்வாகவும், மகிழ்ச்சியின் ஆதாரமாகவும் விளங்கும்.

இதையும் பாருங்க : ‘ஒரு தாயின் 32 வருட போராட்டம்’ – பேரறிவாளனின் தாய் பயோ பிக் குறித்து வெற்றிமாறன் சொன்ன விஷயம் தற்போது வைரல்.

- Advertisement -

மறுமணம் குறித்து இமான் :

உண்மையில் மறைந்த என் தாயார் திருமதி.மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதம் இது.அற்புதமான நபரான அமலியை அடையச் செய்த எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமலியின் அன்பு மகள் நேத்ரா இனிமேல் எனது மூன்றாவது மகளாக இருப்பார்! மேலும் நேத்ராவின் தந்தையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் அற்புதமான உணர்வையும் தருகிறது.எங்கள் திருமண நாளில் என் அன்பு மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை நான் தனிப்பட்ட முறையில் மிஸ் செய்கிறேன்.

மகள்களை நினைத்து உருக்கம் :

என்றாவது ஒரு நாள் எனது மகள்கள் வீட்டிற்கு வருவார்கள் என நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம். நானும், அமலியும், நேத்ராவும் மற்றும் எங்கள் உறவினர்கள் அனைவரும் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை அதிக அன்புடன் வரவேற்போம்.நிபந்தனையற்ற மற்றும் விலைமதிப்பற்ற பாசத்தை பகிர்ந்து கொண்ட அமலியின் பெரிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இத்தனை வருடங்களாக உறுதுணையாக இருந்த எனது இசை ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி :

இப்படி ஒரு நிலையில் இமானின் இரண்டாம் திருமணத்திற்க்கு பின் இமான் குறித்து பதிவிட்டுள்ள இமானின் முதல் மனைவி மோனிகா ‘உங்களின் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்தும் இமான். 12 வருடங்கள் வாழ்ந்த ஒருவரை மாற்றுவது இவ்வளவு சுலமபம் என்றால், உங்களை போன்ற முட்டாளுடன் வாழ்ந்து என் நேரத்தை வீணடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதற்காக நான் உண்மையாக வருந்துகிறேன். உங்களின் சொந்த குழந்தையை கடந்த இரண்டு வருடங்களாக பார்க்கவும் இல்லை கவனிக்கவும் இல்லை.

பொய் வழக்கு கொடுத்தாரா இமான் :

ஆனால், அவர்களுக்கு பதில் வேறு ஒருவரை உங்களால் தேடமுடிந்து இருக்கிறது. ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து என் மகள்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். தேவைப்பட்டாள் அந்த புதிய மகளை கூட நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டு உள்ளார். ஏற்கனவே, குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து ஏமாற்றி புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மாதம் ரூ. 5000 மட்டும் தருகிறார் :

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதோடு விசாரணையானது ஜூன் 9ஆம் திகதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மோனிகா, டி. இமான் பாஸ்போர்ட் தொலைந்து போனதாக கூறி பாஸ்போர்ட் கொடுக்க மறுத்த காரணத்தால் தான் புது பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்ததாவும், குழந்தை கஸ்டடி உரிமையை வைத்திருக்கும் தனக்கே அந்த உரிமையுள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு இமான் முன்னாள் மனைவிக்கு எந்தவித ஜீவனாம்சம் கொடுக்கவில்லையாம். பிள்ளைகளின் செலவுக்கு மாதம் ரூ. 5000 மட்டும் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Advertisement