‘ஒரு தாயின் 32 வருட போராட்டம்’ – பேரறிவாளனின் தாய் பயோ பிக் குறித்து வெற்றிமாறன் சொன்ன விஷயம் தற்போது வைரல்.

0
281
vetrimaran
- Advertisement -

பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாவை பத்தி வெற்றிமாறன் இயக்கும் பயோபிக் படம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர் பேரறிவாளன். இவருக்கு முதலில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலையாகி இருக்கிறார். மேலும், அண்மையில் தான் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர்.

-விளம்பரம்-

அதோடு இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று இருக்கின்றனர். ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடி இருக்கிறார் பேரறிவாளன். மேலும், பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்திருக்கிறார். 31 ஆண்டுகாலம் தன் மகனின் விடுதலைக்காக போராடி இருந்தவர் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள். இது தொடர்பாக விடுதலைக்கு பின் வெளியில் வந்த பேரறிவாளன் பேட்டியில் கூறியிருப்பது,

இதையும் பாருங்க : பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா ? மாட்டிறைச்சி குறித்து கார்த்தி பட நடிகை கிடுக்குப்பிடி கேள்வி.

- Advertisement -

பேரறிவாளன் அளித்த பேட்டி:

நல்லவர்கள் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டமல்ல. சிறை வாழ்க்கையின் போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தி இருந்தார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். முப்பது ஆண்டுகாலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அம்மாவின் தியாகம் மற்றும் சட்டப் போராட்டம் மற்றும் என் குடும்பத்தினரின் கிடைத்த வெற்றி தான் இந்த தீர்ப்பு. என் அம்மா ஆரம்ப காலங்களில் அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்து இருந்தார்.

தன் தாய் குறித்து பேரறிவாளன் சொன்னது:

இந்த வேதனைகளை கடந்த 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடி இருந்தார்கள். என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். மேலும், தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது. எனது விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் உதவியிருக்கிறார்கள். என் விடுதலைக்காக போராடிய அனைவரையும் நேரம் கிடைக்கும் போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன் என்று கூறியிருக்கிறார். மேலும், பேரறிவாளன் விடுதலை அடுத்து பலரும் உற்சாகத்தில் கொண்டாடி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வெற்றிமாறன் அளித்த பேட்டி:

இந்நிலையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் பற்றி வெற்றிமாறன் படம் இயக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெற்றிமாறன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் அற்புதம் அம்மாள் பற்றி ஒரு பயோபிக் படம் குறித்து கேள்வியில் எழுப்பி இருந்தார்கள். அதற்கு வெற்றிமாறன் கூறியிருந்தது, ஆமாம், ரொம்ப மும்முரமாக அதில் வொர்க் பண்ணிட்டு இருக்கிறேன். ஒரு தாயின் போராட்டம், நாட்டினுடைய வரலாறும் இருக்கு. 32 காலமாக நடக்கும் ஒரு அம்மாவுடைய போராட்டத்தை காட்சிப்படுத்துகிறது.

அற்புதம்மாள் பயோபிக் படம்:

ரொம்ப சவாலானது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அற்புதம் அம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கூட முடிவு பண்ணி வைத்திருக்கிறேன். சீக்கிரம் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி வெற்றிமாறன் அளித்த பேட்டி வீடியோவை தற்போது பேரறிவாளன் வெளியே வந்தவுடன் சோஷியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறார்கள். இதனை அடுத்து வெற்றிமாறன் அற்புதம் அம்மாளின் படத்தை கூடிய விரைவில் இயக்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement