அடேங்கப்பா மெர்சல் படம் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா !

0
863
Mersal
- Advertisement -

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம்`மெர்சல்’.அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.
mersal
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: விஜய்யின் அடுத்த படம் குறித்து வெளிவந்த ஸ்பெஷல் தகவல்!

இந்நிலையில் மெர்சல் அரசன் வருகிற 18ம் தேதி தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. அதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மெர்சல் எத்தனை திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்று வரை மொத்தம் 3292 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர

Advertisement