இந்திய நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம். பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் பெயர் மாற்றம். ஐ நா சொல்லவது என்ன?

0
765
- Advertisement -

டெல்லியில் வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை ‛பாரத்’ என மாற்றம் செய்ய மத்திய அரசு சட்ட திருத்த மசோதா கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான் ஒரு நாட்டின் பெயரை எப்படி மாற்ற மத்திய அரசு நினைத்தால் நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்ததில் இதில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்துஅவர்களது கூட்டணிக்கு  ‛இந்தியா’ என்ற பெயரை உருவாக்கி உள்ளன.

-விளம்பரம்-

நம் நாட்டின் பெயர் ‛இந்தியா’ என இருக்கும் நிலையில் அந்த பெயரிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதனை எதிர்க்கவே மத்திய அரசு நாட்டின் பெயரை மாற்ற உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் இந்தியாவின் பெயரை ‛பாரத்’ என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வெளியாகி வருகின்றன. அதன்படி தான் ஜனாதிபதியின் அழைப்பிதழ் ஒன்றில் President of Bharat என இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு வரும் 18ம் தேதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது கூறப்படுகிறது.

- Advertisement -

ஐ.நா அறிவிப்பு:

இந்தியா தனது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் சில நாட்களாக வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் நிரல்களில் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறது. என்றாலும், உலகளவில் “இந்தியா” என்பது “பாரத்” என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் என்னவாகும் என்பது குறித்து விவாதம் தொடங்கியுள்ளது.

பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில் “துருக்கி என்பது துருகியே என கடந்த வருடம் தான்  மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதன் அடிப்படையில் மாற்றப்பட்டது.

-விளம்பரம்-

அதேபோல், எங்களுக்கு அரசுவிடம் கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்” என்றார். இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும். திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்துஅவர்களது கூட்டணிக்கு  ‛இந்தியா’ என்ற பெயரை உருவாக்கி உள்ளன. நம் நாட்டின் பெயர் ‛இந்தியா’ என இருக்கும் நிலையில் அந்த பெயரிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதனை எதிர்க்கவே மத்திய அரசு நாட்டின் பெயரை மாற்ற உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதனை பலரும் எதிர்த்து வருகின்றன.

Advertisement