சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ‘ஸ்குவிட் கேம்’ விளையாட்டு – பரிசை வென்ற தமிழன். பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ?

0
1437
Squidgame
- Advertisement -

சிங்கப்பூரில் நடந்த ஸ்குவிட் கேம் விளையாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சாதனை படைத்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் நடந்த ஸ்குவிட் கேம் விளையாட்டு வெப்சீரிசை தழுவி எடுக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான தென்கொரியா இணைத்தொடர் தான் ஸ்குவிட் கேம்.

-விளம்பரம்-

இந்த தொடரை ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கியிருந்தார்கள். குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு தான் இந்த வெப் சீரிஸ் இயக்கப்பட்டது. மேலும், இதில் ஆழமான பல கருத்துக்களை வைத்து விறுவிறுப்பான கலைக்களத்தில் உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ். மொத்தம் ஒன்பது எபிசோடுகளாக இந்த தொடர் வெளியாகியிருந்தது.

- Advertisement -

ஸ்குவிட் கேம் கதை:

மேலும், வெளியான முதல் நான்கு வாரங்களில் இந்த வெப் சீரிஸை 1.65 பில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்திருந்தார்கள். இது மிகப்பெரிய சாதனை படைத்தது என்று சொல்லலாம். பண தேவை உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு குழுவால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெல்லும் ஒரு நபருக்கு பலநூறு கோடிகள் பரிசாக அளிக்கப்படுகிறது.

வெப் சீரிஸ் கதை:

தோல்வி அடையும் வீரர்கள் வீட்டிற்கு செல்லலாமா? இல்லை அங்கேயே சுட்டு கொல்லப்படுவார்களா? என்பர் ஒவ்வொரு நிமிடமும் சுவாரசியத்துடனும் பதற்றத்துடனும் விறுவிறுப்பாகவும் சென்று வெப் சீரிஸ் சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 400 வீரர்கள் விளையாடும் கதையே தான் இந்த ஸ்குவிட் கேம். இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் விளையாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் வெற்றி பெற்று இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஸ்குவிட் கேம் விளையாட்டில் வென்ற நபர்:

அதாவது, வெப் சீரிஸை தழுவி சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டு தான் ஸ்குவிட் கேம். இந்த விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய பெயர் செல்வம் ஆறுமுகம். மேலும், இவர் இந்த போட்டியில் வென்று 11 லட்சம் ரூபாய் பரிசு பெற்றிருக்கிறார். இந்த போட்டியை பொலிசம் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் நடத்தி இருக்கிறது.

போட்டி குறித்த விவரம்:

இதே நிறுவனத்தை தான் சேர்ந்தவர் செல்வம். இவர் பல தடைகளை தாண்டி இந்த போட்டியில் வென்று சாதனை படைத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் செல்வம் ஆறுமுகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement