Feature Film இயக்குனர்,தொண்டு நிறுவனம்,சினிமா கனவு – ரோபோ ஷங்கரின் வருங்கால மருமகன் – யார் இந்த கார்த்தி ?

0
2327
Indraja
- Advertisement -

கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்றாக பேசப்பட்டு வருவது ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவின் திருமண விஷயம் தான். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்.

-விளம்பரம்-

2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார்.ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் அதன் நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இவர்களுக்கு இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது.மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.இதை பார்த்து ரசிகர் அவர் உங்களது முறை மாமனா? அவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இந்திரஜா, ஆமாம். திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

ரோபோ ஷங்கர் திருமணம் செய்யப்போகும் கார்த்திக் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறார். அவருடைய பூர்வீகம் மதுரைதான். ரோபோ சங்கரும் மதுரையைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் உறவினர்கள் என்பதால் இது நிச்சயம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கலாம் என்கிற கருத்தும் பரவி வருகிறது. கார்த்திக்கிற்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

அதனால் இவரும் ஒரு வகையில் திரைத்துறையைச் சேர்ந்தவர்தான். இந்திரஜாவும் தொடர்ந்து நடிப்பிலும், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கார்த்திக் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு கீழே இந்திரஜா, கார்த்திக்கின் ரசிகர் ஒருவர் “நீங்க இந்திரஜாவைத் திருமணம் செய்யப் போறீங்களா?” எனக் கேட்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த கார்த்திக், “ஆமா… தேதி இன்னும் முடிவு பண்ணல. பண்ணதும் சொல்றோம்!” என்று பதில் சொல்ல, அதே பதிவில் இந்திரஜாவும், “இன்னும் தேதி முடிவு பண்ணல. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்! என்னுடைய சந்தோஷத்தை என் ரசிகர்களிடமும், நல விரும்பிகளிடமும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்!” என்று பதில் அளித்திருக்கின்றார். எனவே ரோபோ ஷங்கர் வீட்டில் விரைவில் டும் டும் டும் சத்தத்தை எதிர்பார்க்கலாம்.

Advertisement