தேவர் ஐயாவை இழிவுபடுத்திய, விஜய் சேதுபதியை உதைப்பருக்கு 1 உதைக்கு இவ்ளோ பணம் – அர்ஜுன் சம்பத் அறிவிப்பால் எழுந்த சர்ச்சை

0
453
arjunsampath
- Advertisement -

மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என்று பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட தொகுப்பாளராகவும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. இது குறித்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார்.

-விளம்பரம்-
The Person Who Attacked Vijay Sethupathi | விஜய் சேதுபதி

அந்த வகையில் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் விஜய் சேதுபதியை பின்புறமாக எட்டி உதைத்து இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத விஜய்சேதுபதி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார். பின்னர் விஜய்சேதுபதியை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். மேலும், இது குறித்த வீடியோ சோசியல் மீடியா முழுவதும் பேசும் பொருளாக இருந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது.

இதையும் பாருங்க : கர்னாடககாரன் அடிக்கல, தமிழன் நான் தான் அடித்தேன் – விஜய் சேதுபதியை தாக்கிய நபரின் முதல் வீடியோ.

- Advertisement -

அதிலும் விஜய் சேதுபதிக்கும், உதைத்த நபருக்கும் இடையே சமாதானம் ஆனது என்றும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதியை உதைத்ததற்கான காரணத்தை உதைத்தவரே பேட்டியில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என் பெயர் மகா காந்தி. விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியது அனைவருக்கும் தெரிந்தது. அதனால் விமான நிலையத்தில் அவரை பார்த்து பாராட்டுவதற்காக நான் சென்றேன். தேசத்திற்காக தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் என்று நான் அவரிடம் சொன்னேன்.

அதற்கு அவர் இது தேசமா என்றார். அதே போல குரு பூஜையில் கலந்துகொள்வீர்களா என்று கேட்டேன். அவரோ யார் குரு என்றார். பின் நான் என்னுடைய பொருள்களை எல்லாம் எடுப்பதற்காக சென்றபோது பின்னாடி இருந்து இரண்டு கைகள் என்னைத் தாக்கியது. 100% அது விஜய் சேதுபதியா? அவருடன் இருந்தவர்களா? என்று எனக்கு தெரியாது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதியை கேரளாக்காரர் அடித்துவிட்டார். கன்னடக்காரர் அடித்துவிட்டா என்று சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. தமிழன் மகா காந்தி நான்தான் அடித்தேன். அவர்கள் என்னை அடித்ததால் அடித்தேன். மக்கள் செல்வன் என்ற போர்வையில் விஜய் சேதுபதி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். உண்மையாலுமே அவருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும், மரியாதையும் கிடையாது.

இனிமேலாவது மக்கள் இதை புரிந்து கொண்டு நடந்தால் நன்றாக இருக்கும்’ என்றார். தற்போது இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ‘தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும் – அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001/- என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத், விஐய் சேதுபதி குறித்து பல முறை பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement