ஹார்திக் பாண்டியா அவரது மனைவியின் ரொமான்டிக் புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம். அப்படி என்ன பண்ணிட்டாங்கனு பாருங்க.

0
14767
hardhik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா, தனது மனைவியுடன் பதிவிட்ட புகைப்படம் ஒன்றை விதி மீறல் என்று குறிப்பிட்டு இன்ஸ்டகிராம் பக்கம் நீக்கியுள்ளது ரசிகர்களை குழப்பி இருக்கிறது. இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா இந்திய அணிக்காக இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளிலும், 54 ஒருநாள் போட்டிகளிலும், 40 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவருக்கும் செர்பிய அழகியான நட்டாஷாவிற்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது என்று பாண்டியா அறிவித்தார்.புத்தாண்டு முதல் தேதியன்று துபாயில் நடுக்கடலில் மோதிரம் மாற்றிக் கொண்ட அவர்கள் விரைவிலேயே தாங்கள் குழந்தை பெற இருப்பதாகவும் அறிவித்திருந்தனர்.மேலும் அதன் பின்னர் இருவருக்கும் வெகு எளிமையாக திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

இந்த தம்பதிக்கு அவர்கள் கூறியது போலவே ஜூலை 30ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை பிறந்ததை சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்துடன் அறிவித்தனர். அவரின் அந்த பதிவிற்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நட்டாஷா தனது கணவருக்கு முத்தமிடுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த புகைப்படம் விதிமீறலுக்கு உட்பட்டது என்று இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கியிருக்கிறத. பின்னர் வேறு ஒரு தலைப்பை(caption) கொடுத்து அந்த புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டிருக்கிறார் நட்டாஷா.ஆனால், அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் நீக்கியது என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement