காசு குடுத்தால் தி.மு.ககாரன் கூட தான் மோடி கூட்டத்துல போய் ஒக்கருவான் – மோடி குறித்து போஸ் வெங்கட் கடும் தாக்கு

0
412
- Advertisement -

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே டப்பிங் யூனியன் தேர்தல் குறித்து தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். இதில் ராதாரவியும், நீண்ட நாள் டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்த டப்பிங் யூனியன் தேர்தல் இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலருமே வாக்களித்து இருக்கிறார்கள். மேலும், தேர்தலில் வாக்களிக்க நடிகர் ராதாரவி அவர்கள் நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து வந்திருக்கிறார். இந்நிலையில் டப்பிங் யூனியன் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த போஸ் வெங்கட அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், மேடையில பாரத பிரதமரா அவர் பேசினதே கிடையாது.

- Advertisement -

போஸ் வெங்கட் பேட்டி:

ஏதோ எதிர்க்கட்சி தலைவராக தான் பேசுகிறார். அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது எல்லாம் கூட்டம் சேர்த்துகிறார்கள். அது தானாக சேர்ந்த கூட்டம் இல்லை, காசு கொடுத்து சேர்த்த கூட்டம். அவர்கள் தான் அடித்துப் பிடித்து பிடுங்கி வைத்த பணம் எக்கச்சக்கமாக இருக்கிறது. அதை வைத்து தான் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் சேர்ந்த போது வந்த கூட்டம் மாதிரி இப்போது எங்குமே கிடையாது. அதெல்லாம் தானா சேர்ந்த கூட்டம்.

அரசியல் குறித்து சொன்னது:

இப்ப நடந்திருக்கும் வாக்கெடுப்புகள் படி திமுக 50% ,அதிமுக 30%, நாம் தமிழர் கட்சி 7%, பாஜகவும் 7% தான் இருக்கிறதாக சொல்கிறார்கள். இதனால் தமிழகத்தில் பாஜக வருவது ரொம்ப கஷ்டம். அதே போல் விஜயின், தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கையும், திமுக கட்சியின் கொள்கையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. அவருடைய கொள்கை கோட்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஊழல் இல்லாத அரசை கொண்டு வரலாம் என்று அவர் கூறியிருந்தார். அரசியல் எல்லாருமே வரும்போது ஊழல் இல்லாத அரசியலை கொண்டு வரலாம் என்று தான் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

தமிழக வெற்றி கழகம் குறித்து சொன்னது:

அதே போல் ஊழல் குற்றச்சாட்டு பல பேர் மீது எழுந்திருக்கிறது தவிர அதை நிரூபிக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் கூட ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக சொன்னார்கள். ஆனால், இங்கே நிரூபிக்கப்பட்டது எல்லாம் பொய்யான குற்றச்சாட்டு தான். விஜய் அவர்கள் வைத்திருக்கும் கோட்பாட்டில் எல்லாம் வித்தியாசம் பெரிதாக இல்லை. அதில் என்ன அவர் புதுசாக கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. மாற்றம் என்று வரும்போது திராவிட முன்னேற்றக் கொள்கை கொள்கை தவிர வேறு ஏதாவது வைத்திருந்தால் தானே ஏற்படும். இதை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று கூறுகிறார்.

தமிழக வெற்றி கழகம்:

மேலும், விஜய் அவர்கள் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் அறிவித்ததில் இருந்தே மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். பின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை தமிழக வெற்றி கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Advertisement