தளபதி 64 படத்தின் தலைப்பு இது தானா. இன்னிக்கு விஜய் ரசிகர்களுக்கு இது தான் ட்ரீட்.

0
53600
vijay-64
- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் மாநகரம்,கைதி படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யை வைத்து “தளபதி 64” படம் இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் கசிந்து கொண்டே வருகின்றன. இதனைத்தொடர்ந்து விஜய் அவர்கள் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கதை தமிழகத்தை உலுக்கிய நீட் தேர்வை வைத்து இருப்பதாகவும், மேலும், இந்த நீட் தேர்வினால் பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராக உள்ளதாகவும் இணையங்களில் பேசப்பட்டு வருகிறது. தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் ரொம்ப பிஸியாக தளபதி விஜய் நடித்து வருகிறார். மேலும்,இந்த படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் தொடர்ந்து டெல்லியில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், விஜய் சேதுபதி அவர்கள் இன்னும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வில்லை.

இதையும் பாருங்க : சிவாஜி வாழ்ந்த வீடு ஐயா அது. வருத்தத்தில் புலம்பும் திரையுலக பிரபலங்கள்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் அவர் வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. இந்நிலையில் தளபதி 64 படம் சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் என சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒன்று தினமும் வந்து கொண்டே இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து தளபதி 64 படத்தின் தலைப்பு குறித்து பல கருத்துக்களும் இணையங்களில் வந்து உள்ளன. அது என்னனா, தளபதி 64 படத்திற்கு “நம்ம வாத்தியார்” என்ற தலைப்பைத் தேர்வு செய்து உள்ளார்கள் படக்குழுவினர் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் தளபதி விஜய் அவர்களின் படம் என்றாலே எப்போதும் தலைப்பு ஒரு வார்த்தையில் தான் இருக்கும்.

Image

-விளம்பரம்-

ஆனால், இந்த தலைப்பு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள். மேலும்,வாத்தியார் என்று தலைப்பு வைக்கலாம் என்றால் ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் வாத்தியார் என்ற படத்தில் நடித்து உள்ளார். இதனால் தான் நம்ம வாத்தியார் என்ற தலைப்பை தேர்வு படக்குழுவினர் செய்து உள்ளார்கள் எனவும் தெரியவந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரே வார்த்தையில் தலைப்பு இருந்தால் வேற லெவல் இருக்கும் என்பதால் தளபதி 64 படத்திற்கு வேறு தலைப்பையும் படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றார்கள் என கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிய வந்துள்ளது.

Advertisement