மயங்கி விழுந்துட்டேன் ! நயன்தாராவுக்கு இதெல்லாம் பிடிக்காது – அறம் பழனிபட்டாளம்?

0
3235
pazhanipattalam
- Advertisement -

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘சிரிச்சாப் போச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் பழனிபட்டாளம். ‘அறம்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்கத் தொடங்கியுள்ளார். படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் பலரின் கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார். அவரிடம் ஒரு ஜாலி சாட்!
aramநயன்தாராவுடன் நடித்த அனுபவம்..?

-விளம்பரம்-

‘நயன்தாரா மேமை பத்தி நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல, தமிழ்நாட்டுக்கே தெரியும், ‘லேடி சூப்பர் ஸ்டார்’னு. கூட சேர்ந்து வொர்க் பண்றோம்னு நினைக்கும்போதெல்லாம் கிள்ளிப் பாத்துக்குவேன்.

- Advertisement -

ஷூட்டிங்ல நடிக்குறது மட்டுமில்லாம நிறைய வொர்க் பண்ணுவாங்க. அவங்களுக்கு வெயிட் பண்றதும் பிடிக்காது. டக்கு டக்குனு ஷாட் போயிடணும், ‘நான் நிக்குற இடம் கரெக்டா, லைட்டிங் கரெக்டா வருதா’ இது மாதிரியான விஷயங்களை கேட்டுகிட்டே இருப்பாங்க. துணை இயக்குநர் மாதிரிதான் இருப்பாங்க.
pazhanipattalamஇதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப வியப்பா இருந்தது. ஒரு நடிகர்ன்னா அதுக்கான வேலையை மட்டும் பார்க்கக் கூடாதுன்னு அன்னைக்குதான் புரிஞ்சது. படம் முடிஞ்சதுக்கு அப்புறம் ‘ரொம்ப சூப்பரா பண்ணியிருக்கீங்க, வெளியில ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது’னு கேட்டாங்க.இந்த ரோல் பண்ணது எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு, வெளியிலயும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு மேம்’னு சொன்னேன். ‘உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு தொடர்ந்து இதே மாதிரி நடிங்க ஆல் தி பெஸ்ட்’னு சொன்னாங்க. ரொம்பப் பெருமையா இருந்தது.

ஒரே லொக்கேஷன்ல ஷூட்டிங் நடந்தது, என்னென்ன சவால்கள் இருந்தது?

-விளம்பரம்-

”பகல், இரவு ரெண்டு நேரங்கள்லயும் ஷூட்டிங் இருக்கும். ராத்திரி கூட ஒண்ணும் தெரியாது. பகல் டைம்ல அங்க இருக்குற ஒரே பிரச்னை வெயில் மட்டும்தான். ‘எப்போடா நிழல் வரும்’னு வேண்டிகிட்டு இருப்போம். அடிக்குற வெயில்ல நான் ஒருமுறை மயங்கி விழுந்துட்டேன். கும்பலா ஓடி வரணும், போலீஸ் அப்போ தடியடி நடத்தும். திரும்ப ஓடணும். இந்த சீனுக்காக நிறைய நேரம் அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டே இருந்தேன்.
Aramநான் கரெக்டா வந்தாலும் பின்னால வந்தவங்க டைமிங்ல சொதப்புனாங்க. எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல மயக்கம் வர்ற மாதிரி இருந்தது. ஃபைனலா ஒரு ஷாட் நல்லா வர்ற மாதிரி இருந்ததும், எல்லாத்தையும் கன்ட்ரோல் பண்ணிட்டு தம் கட்டி ஓடி பீட்டர் ஹெயின் மாஸ்டர், டைரக்டர் எல்லாரும் உட்காந்துருக்க இடத்துலேயே போய் மயங்கி விழுந்துட்டேன். அங்க சீனுக்காக வெச்சுருந்த ஆம்புலன்ஸுலேயே என்னைப் படுக்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட அரை மணி நேரமா அங்கதான் இருந்தேன். கோபி அண்ணா பக்கத்துல இருந்து எனக்கு விசிறி விட்டுட்டே இருந்தார். பொதுவா லீடிங் ரோல்ல இருக்கிற ஆட்கள்தான் படத்துல கஷ்டப்படுவாங்க. ஆனா இந்தப் படத்துல துணை நடிகர்கள் உட்பட எல்லாருமே கஷ்டப்பட்டாங்க.

Advertisement