தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலமும் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.இந்த நிலையில் இருட்டு அறையில் முருட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் டீஸர் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும். பெரும்பாலானோர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு எதிரியாக பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்த படக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார் பாரதிராஜா. அதிலும் குறிப்பாக சினிமா வியாபாரமும்தான்.
ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? என்று கடுமையாக குறிப்பிட்டு இருந்தார் பாரதி ராஜா.
இப்படி ஒரு நிலையில் பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்கு பதில் அளித்திருந்த இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர், பாரதி ராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தில் இடம்பெற்ற ஒரு போஸ்டரை பதிவிட்டு ‘மதிப்பும் மரியாதையுடன் இதை சொல்கிறேன்,, டிக் டிக் டிக் படத்துல இத பாத்து கூசாத கண்ணு, இப்போ கூசிரிச்சோ’ என்று பதிலடி கொடுத்திருந்தார். இதை கண்டு பலரும் கொஞ்சம் அதிருப்த்தி அடைந்தனர். இப்படி ஒரு நிலையில் பாரதி ராஜாவிடம் மன்னிப்பு கேட்டு இயக்குனர் சந்தோஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இரண்டாம் குத்து படத்தை இயக்கி நடித்து உள்ளேன் அதன் போஸ்டர்கள் டீசருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில் எனது டுவிட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டு விட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்கு பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்க கூடாது என்று மனம் கூறியது. ஆகவே நான் போட்ட ட்வீட்ஸ் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்றும் உறுதியளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சந்தோஷ்.