சிவாஜி தனது தாத்தா இல்லை என்று தெரிந்ததும் அழுத இறுக்கப்பற்று இயக்குனர்

0
2085
- Advertisement -

சிவாஜி என் தாத்தா இல்லை என்று கண்ணீர் விட்டு அழுததாக இறுக்கப்பற்று இயக்குனர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் இறுக்கப்பற்று. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த், ஸ்ரீ, சானியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

திருமணம் ஆகி கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் உளவியல் ஆலோசகராக ஷ்ரத்தா இருக்கிறார். இவர் இதை செய்வதற்கு காரணம் இவருக்கும் இவருடைய கணவர் விக்ரம் பிரபுவுக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இதுவே ஒரு கட்டத்தில் இவர்களுக்கு மத்தியில் பிரச்சனையாக உருவாகிறது. பின் இரண்டு வெவ்வேறு ஜோடிகள் ஷ்ரத்தாவிடம் ஆலோசனைக்கு வருகிறார்கள்.

- Advertisement -

இறுக்கப்பற்று படம்:

ஐடி துறையில் பணியாற்றும் விதார்த், அவருடைய மனைவி அபர்ணதி குழந்தை பிறந்து உண்டாகி விட்டதாக காரணம் சொல்லி விவாகரத்து கேட்கிறார். இன்னொரு பக்கம், காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ -சானியா இருவருக்கும் தினமும் சண்டை வருவதால் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது. இதிலிருந்து இருவரும் பிரிய நினைக்கிறார்கள். இறுதியில் இவர்களை இந்த பிரச்சனையில் இருந்து எப்படி ஷ்ரத்தா மீட்டெடுக்கிறார். ஷ்ரத்தா-விக்ரம் பிரபு கிடையில் ப்ரச்சனை ஏற்படுகிறதா? இவர்கள் மூன்று ஜோடிகளும் எப்படி தங்களுடைய திருமண வாழ்க்கை பிரச்சினையிலிருந்து மீள்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

நிகழ்ச்சியில் இயக்குனர் யுவராஜ் தயாளன்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இறுக்கப்பற்று படத்தின் வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் இயக்குனர் யுவராஜ் தயாளன் கூறியிருப்பது, படத்தில் முக்கிய கதாபாத்திரமான ஷ்ரத்தாவின் கதாபாத்திரத்திற்கு அவரை நான் கடைசி சாய்ஸாக தான் நினைத்து வைத்திருந்தேன். காரணம், கஷ்டப்பட்டு நடிக்கும் ஒரு நடிகையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால், சூப்பர் என சொல்லும் அளவிற்கு ஷ்ரத்தாவிற்கு கதாபாத்திரம் அமைந்துவிட்டது.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

படத்தின் அதிகமாக ஷ்ரத்தாவின் வசனங்கள் தான் இருக்கிறது. மேலும், படத்தில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்து கொடுத்து இருந்தார்கள். விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க நிறைய பேர் தயங்கினார்கள். இது மல்டி ஸ்டார் படமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஹீரோயின் மையப்படுத்திய படமாக இருப்பதாக பலரும் நினைத்தார்கள். ஆனால், விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அதோடு அவருக்கும் எனக்கும் சிறு வயதிலிருந்தே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர்.

சிவாஜி குறித்து சொன்னது:

சின்ன வயதில் இருந்து சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்றெல்லாம் சொல்லுவார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடம் சொல்வேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என்று நம்பி எல்லோரிடம் சொன்னேன். அதற்குப் பிறகுதான் அவர் என் தாத்தா இல்லை என்று சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுந்தார் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement