வெளியானது இரும்பு திரை 2 பற்றிய அறிவிப்பு.! ஆனால், இயக்குனர் மித்ரன் இல்லை.!

0
1750
Irumbu-thirai-2
- Advertisement -

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான “இரும்பு திரை ” படம் திரையரங்குகளில் வெற்றிகரமாகஓடியது . தற்போது சூழ்நிலையில் தேவையான விழிப்புணரவை மக்கள் மத்தியில் தெளிவாக புரியவைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது.

-விளம்பரம்-

அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ் ரோபோ சங்கர் என பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படத்தில் இயக்குனர் மித்ரனும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மித்ரன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது.

இதையும் படியுங்க : இதுவரை இல்லாத அளவு இந்தியில் படு மோசமாக நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங்.! புகைப்படங்கள் இதோ.! 

- Advertisement -

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இரண்டாம் பாகத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் மே மாதம் துவங்கவுள்ளது. விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் விஷால் இரும்புதிரை 2 படத்தின் படப்பிடிப்புகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும், இந்த படத்தில் அர்ஜுனும் இருக்கிறார் என்பது மேலும் ஒரு சர்ப்ரைஸ்.

-விளம்பரம்-

Advertisement