அது நடந்தால் சீரியல் முடிந்துவிடும் – பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பேட்டி.

0
6015
bharathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-
bharathikanamma

இதற்கெல்லாம் மேலே சென்று சமீபத்தில் தன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணிநேரத்தை ஒளிபரப்பு செய்து மூன்று மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டது இந்த சீரியல். கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கண்ணம்மாவின் மாமியாரிடமும் இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் ப்ரோமோவில், ஆட்டோவில் சென்ற கண்ணம்மாவுக்கு இது பாரதி வீடு எனத் தெரிய வர, அங்கிருந்து புறப்பட தயாராகிறாள். அவளைப் பார்த்த ஹேமா, விடாப்பிடியாக வந்து, கண்ணம்மாவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள்.

இதையும் பாருங்க : இளம் வயதில் கிளாமரான குட்டை உடையில் நீலிமா நடத்தியுள்ள போட்டோ ஷூட் – இவங்க ஏன் ஹீரோயினா நடிக்கல ?

- Advertisement -

8 ஆண்டுகளாக தான் தேடிக் கொண்டிருந்த கண்ணம்மா தனது கண்முன் வந்து நிற்பதைப் பார்த்து, சந்தோஷத்திலும், ஆச்சர்யத்திலும் சிலையாக நிற்கிறார் மாமியார் செளந்தர்யா. ஹேமாவும் தனது குழந்தை தான் என கண்ணம்மாவுக்கு தெரிய வருமா? அப்படி தெரிய வந்தால் ‘பாரதி கண்ணம்மா’ முடிவு பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன், பாரதியும் கண்ணம்மாவும் இணைந்துவிட்டால் கதை முடிந்துவிடும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவில் 8 : 15 நிமிடத்தில் பார்க்கவும்

இது ஒருபுறம் இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் சுந்தரி என்ற புதிய சீரியல் துவங்கப்பட இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் வருவது போலவே இந்த சீரியலிலும் நாயகி தனது தோற்றதால் படும் அவமானங்கள் பின்னர் அதிலிருந்து மீண்டு அவர் எப்படி சாதிக்கிறார் என்பது தான் கதை. இந்த சீரியலில் KPY போட்டியாளரும, டிக் டாக் பிரபலமுமான கேப்ரியா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement