இளம் வயதில் கிளாமரான குட்டை உடையில் நீலிமா நடத்தியுள்ள போட்டோ ஷூட் – இவங்க ஏன் ஹீரோயினா நடிக்கல ?

0
1675
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.’ நான் மகான் அல்ல’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கினார். பிறகு வழக்கம் போல் நடிகை நீலிமாவும் சின்ன துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான்.

- Advertisement -

அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். இவருக்கு சிறு வயதிலேயே அதாவது 21 வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is Neelima.jpg

இத்தனை படங்களில் நடித்தாலும் நடிகை நீலிமா ஒரு படத்தில் கூட கதாநாயகியாக நடிக்கவில்லை, இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற நீலிமா பேசுகையில், எனக்கு அது அமையவில்லை. மேலும், கதாநாயகியாக வர வேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி நினைத்திருந்தால் நான் 21 வயதில் கல்யாணம் செய்து இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். இதுவரை பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்திருந்தலும் இவர், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இளம் வயதில் இவர் படு கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement