ஹாலிவுட் பட ரீமேக்ல நடிக்க அவர் ஒன்னும் அஜித் இல்ல – இப்போதே ஊலை ரஜினி ரசிகன். வெங்கட் பிரபு கொடுத்த பதிலடி.

0
295
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் தளபதி 68 படம் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

தளபதி 68 படம்:

இதை தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில் தளபதி 68 திரைப்படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தின் மேலே விமானமும் பறந்தபடி இருக்கிறது. பின் அந்த புகைப்படத்தில் வலது புறம் இருக்கும் விஜய் நீண்ட தாடியுடனும், இடது பக்கம் இருக்கும் விஜய் இளமையாகவும் இருப்பது போல் இருக்கிறது. மேலும், இடது பக்கம் இருக்கும் விஜய் விண்வெளிக்கு செல்லும் முன்பும், வல து புறம் இருக்கும் விஜய் விண்வெளியில் இருந்து வந்த பின்பும் என்பது போல கூறப்படுகிறது.

வைரலாகும் போஸ்டர்:

அந்த போட்டோவில் பாராசூட்டும் இருக்கிறது. பின் அந்த புகைப்படத்தின் கீழ் light can devour darkness but darkness cannot consume the light அதாவது, இருளை ஒளியால் விழுங்க முடியும். ஆனால், இருளால் ஒளியை கிரகிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபுவை டேக் செய்து, 2023 ஆம் ஆண்டில் வாரிசு, லியோ படத்தின் தோல்வியால் 2024ல் நல்ல விஜய் படத்தை எதிர்பார்க்கிறோம்.

-விளம்பரம்-

நெட்டிசன் விமர்சனம்:

நீங்கள் உண்மையில் ஏதேனும் ஹாலிவுட் ரீமேக் செய்ய திட்டம் இருந்தால் அதற்கு அவர் பொருத்தமானவர் இல்லை என்று நான் நினைக்கிறேன். காரணம், விஜய் ஒன்றும் அஜித்குமார், மகேஷ்பாபு இல்லை. விஜய் உடைய படங்களை பார்க்கும்போது சில நல்ல தெலுங்கு ரீமேக்ஸ் ஆகும். அதனால் தான் அவர் இந்த துறையில் நிலைத்து நிற்கிறார். ஒரு நல்ல தெலுங்கு படத்தை வாங்கி ரீமேக் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனை.

வெங்கட் பிரபு பதில்:

ஒருவேளை நீங்கள் ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யப் போகிறீர்கள் என்றால் பாதி காப்பி செய்யப்பட்ட ஹாலிவுட் ரீமேக்கான லியோ படத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்கு வெங்கட் பிரபு, மன்னிச்சுக்கோங்க சகோதரரே, நான் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பை பகிரவும் என்று கூறியிருக்கிறார். இன்னொரு பக்கம் நெட்டிசன்கள், விஜய் goat படத்தின் போஸ்டர் வில் ஸ்மித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி மேன் என்ற படத்தின் போஸ்டரை போல் இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement