லியோ பாடல் காப்பி என்று வெளிநாட்டு இசையமைப்பாளர் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த வாரிசு மற்றும் பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
லியோ படம்:
இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக, படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும், உலக அளவில் முதல் நாளில் இந்த படம் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதனை அடுத்து நான்கு நாட்களில் 400 கோடிக்கு மேல் லியோ படம் வசூல் செய்து இருக்கிறது.
இனி வரும் நாட்களில் லியோ படம் மிக பெரிய விழாவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் லியோ பாடல் காப்பி என்ற சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. லியோ படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்.
லியோ படத்தில் நான் ரெடி, பேட் ஏஸ், அன்பெனும் ஆயுதம் போன்ற பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதன் பின் வில்லன் யாரு என்ற பாடலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஆர்டினரி மேன் என்ற இங்கிலீஷ் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. இந்த பாடலை நிகிதா காந்தி என்பவர் பாடியிருக்கிறார். இந்த பாடலை ஹைசன்பர்க் எழுதியிருக்கிறார்.
மேலும், இந்த பாடல் புகழ்பெற்ற வெப் சீரிஸான பீக்கி ப்ளைண்டர்ஸின் இசை சாயலில் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பீக்கி ப்ளைண்டர்ஸின் வெப் தொடருக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஓட்னிகா இந்த பாடலை டேக் செய்து இந்த பாடலுக்கான உரிமையை என்னிடம் யாரும் கேட்கவில்லை. என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த பாடல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த பாடல் சர்ச்சை தான் வைரலாகி வருகிறது.